எண்கணிதத்தை வைத்து ஒருவரின் குணாதியசயத்தை முழுமையைாக கூற முடியும். இதற்கு அவர்களின் பிறந்த திகதி முக்கியம் பெறுகின்றது. ஒரு நபரின் இயல்பு மற்றும் ஆளுமை பற்றி ராசிகளை வைத்து கணிப்பதுபோல, எண் கணிதத்தில் எண்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
ராசிகளை வைத்து நாம் குணத்தை மதிப்பிடும் போது அது கிரகங்களின் அடிப்படையில் மாற்றமடையும்.
ஆனால் ஒவ்வொரு திகதிகளின் அடிப்படையில் ஒவ்வொருவரின் குணத்தை எளிதாக கண்டுகாள்ள முடியும். அந்த வகையில் நாளை ஆகஸ்ட் 21 முதல் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
குறிப்பாக இந்த 5, 14, 23 திகதிகளில் பிறந்தவர்களுக்கு முக்கியப் பணிகளுக்கான பொறுப்பு கிடைக்கும். தொழில் செய்யும் நபராக நீங்கள் இருந்தால் மகிழ்ச்சி அடையுங்கள் ஏனென்றால் இதில் சாதகமான சூழல் நிலவும்.
திருமணத்தில் இதுவரை பிரச்சனை ஏற்பட்டு வந்தவர்களுக்கு இப்போது தடையில்லாமல் கிடைக்கும். நீங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவிலிருந்து நிறைய பயனடைவீர்கள்.
உறவுகளில் அன்பும் நம்பிக்கையும் அதிகரிக்கும். வாழ்க்கையில் உற்சாகம் நிறைந்த சூழல்நிலை நிலவும். சில வேளைகளில் அதிஷ்டம் கிடைத்தாலும் நீங்கள் செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் அதில் கவனத்துடனும் கண்ணியத்துடனும் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும்.
சில நேரங்களில் வாழ்க்கையில் பல முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தொழில் வாழ்க்கையில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய முன்னேற்றம் ஏற்படும்.
சூழ்நிலைக்கு ஏற்ப மாற முயற்சி செய்யுங்கள். இது பொதுவாக காரணிகளாக இருந்தாலும் 4,5,6 இலக்களில் பிறந்தவர்களுக்கு வெவ்வேறு பலனும் உள்ளது. 4 இல் பிறந்தவர்கள் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
தொழிலில் புதிய இலக்குகளை அடைய உந்துதலாக காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். சக ஊழியர்களுடன் நெருக்கமாக வேலை செய்வீர்கள்.
குடும்ப பிரச்சனையை கண்டுகொள்ளாமல் இருப்பீர்கள் எனவே இதை அலட்சியம் செய்யாமல் பொறுப்புடன் இருப்பது நல்லது. 5 இலக்கத்தை அதிஷ்டமாக கொண்டவர்கள் தொழில் தொடர்பான முக்கிய தகவல்கள் கிடைக்கும்.
அலுவலகத்தில் உங்கள் செயல்திறன் மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். எண் 6 உள்ளவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் முன்னேறுவார்கள்.
காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். தொழில்-வியாபாரத்தில் புதிய சாதனைகளை நிகழ்த்துவீர்கள். பொருளாதார நிலை மேம்படும். உங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். சுகபோகங்களில் வாழ்வீர்கள். எனவே 5, 14, 23 திகதிகளில் பிறந்தவர்கள் நாளை முதல் பல்வேறு மாற்றத்தை வாழ்வில் உணர்வீர்கள்.