தமிழ் சினிமாவில் காமெடிய நடிகராக அறிமுகமாகி கிடு கிடுவென வளர்ந்து வரும் சந்தானம் திடீரென ஹீரோ அவதாரம் எடுத்து மார்க்கெட்டை இழந்துவிட்டார். மேலும் பரோட்டா சூரி, யோகி பாபு உள்ளிட்டோர் அவரது இடத்தை நிரப்பி ரசிகர்களின் ஃபேமஸ் காமெடியன்களாக வலம் வந்துகொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் விட்ட இடத்தை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்பதற்காக சந்தானம் விடா முயற்சியுடன் இருந்து வருகிறார். அந்தவகையில் கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த A1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று ஓரளவிற்கு வசூலும் பெற்றது. அதையடுத்து தற்போது டிக்கிலோனா படத்தில் நடித்துள்ளார். கார்த்திக் யோகி இயக்கும்ம் இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

நேற்றைய முன்தினம் படத்தின் புரொமோஷன் பணிகள் துவங்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இரண்டு போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் தீயாக பரவி ட்ரெண்டானது. இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் மூன்றாம் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் சந்தானத்துடன் ஐன்ஸ்டீன் கெட்டப்பில் நடிகர் யோகிபாபு நின்றுகொண்டிருக்கிறார். ஒரே டைமில் இந்த இரண்டு நடிகர்களின் காமெடி கவுண்டரை திரையில் ரசிக்க அனைவரும் வெறித்தன வெய்ட்டிங்கில் இருக்கின்றனர்.