தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது பிஸியான நடிகையாக மாறியுள்ளார் நக்ஷத்ரா நாகேஷ். அங்கரிங் செய்து கொண்டிருந்தவர். அதனை தொடர்ந்து படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்க துவங்கினார்.

ஆர்யா நடித்த 'சேட்டை' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனாலும், பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சின்னத்திரை பக்கம் வந்தார். அதன் விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஹீரோயினாக நல்ல வரவேற்பை பெற்றார்.

அண்மையில் திருமணமும் செய்து கொண்ட இவர், தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதனை குறித்து பேசும் போது, படம் ஷூட்டிங் ஒன்றிற்காக சென்ற போது, வேனில் சென்று உடை மாற்ற கேட்டுக்கொண்டனர்.

ஆனால், அந்த வேனில் ஜன்னல்கள் இல்லை. வெறும் கண்ணாடிகள் மட்டும் இருந்தன. அதே போல வேனுக்கு வெளியே ஐந்து பேர் அமர்ந்திருக்கிறார்கள் என்றார்.

அவர்களுக்கு உடை மாற்ற போவது தெரிந்தும் அங்கிருந்து நகரவில்லை. உடை மாற்றுவதைப் பார்க்கவே அவர்கள் அங்கு அமர்ந்து இருந்தார்கள் போல. பின்னர் வேறுவழியின்றி பக்கத்தில் இருந்த வீட்டிற்கு சென்று உடை மாற்றினேன் என கூறினார்.