கலை உணவென்பது நமது உடலுக்கு தேவைப்படும் ஒரு உணவாகும். நாம் அதிகாலையில் உணவு உண்பது தான் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் முக்கியம் தருகிறது. ஆனால் இது ஆரோக்கியத்தையும் கெடுக்கும்.

நாம் இரவு முழுக்க  உறக்கத்தில் இருக்கும் போது வயிறு வெறுமையாக இருக்கும். இந்த நேரத்தில் வயிற்றில் வாயுக்கள் நிரம்பி இருக்கும். இதகால் நாம் அதிகாலையில் சாப்பிடுவது மிகவும் முக்கியம். ஆனால் சிலர் உண்ணும் உணவுகள் அவர்களுக்கு நோயை உண்டாக்கும்.

எனவே காலை உணவை சாப்பிடுவதில் மிக கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் நாம் வெறும் வயிற்றில்  சாப்பிடக்கூடாத உணவுகள் என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

ஒருபோதும் வெறும் வயிற்றில் உண்ண கூடாத உணவுகள் | Dont Eating Some Food On Empty Stomach Bad Issue

வெறும் வயிற்றில் நாம் உண்ணும் உணவுகள் நமக்கு ஆரோக்கியமாக இருந்தாலும் அது ​​செரிமான கோளாறுகளை ஏற்படுத்தலாம். வெறும் வயிற்றில் சில குறிப்பிட்ட உணவுகள் சாப்பிடுவது நல்லது அல்ல.

ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சைப் பழங்களைப் போலவே சிட்ரஸ் பழங்களிலும் வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. இதை வெறுவயிற்றில் சாப்பிட்டால் அது ஆசிட் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கிறது.

ஒருபோதும் வெறும் வயிற்றில் உண்ண கூடாத உணவுகள் | Dont Eating Some Food On Empty Stomach Bad Issue

இதன் காரணமாக வயிற்றின் ஓரங்களில் இருக்கும் புரணி எரிச்சல் அடைந்து அதனால் அசௌகரியம், நெஞ்செரிச்சல் ஏற்படலாம். இதுவே பிற்காலத்தில் அல்சர் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் கூட உருவாக்கும்.

காலையில் காபி குடிப்பவர்கள் அதிகம். இதை வெறும் வயிற்றில் குடிப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். காபி வயிற்றில் உள்ள ஆசிட்டை உற்பத்தி செய்வதற்கு தூண்டுகிறது.

ஆகவே வெறும் வயிற்றில் காபி குடித்தால் நெஞ்செரிச்சல், ஆசிட் ரிஃப்ளக்ஸ் அல்லது கேஸ்டிரிட்டிஸ் போன்ற பிரச்சனைகள் வரும்.

ஒருபோதும் வெறும் வயிற்றில் உண்ண கூடாத உணவுகள் | Dont Eating Some Food On Empty Stomach Bad Issue

காலை எழுந்தவுடன் சர்க்கரை நிறைந்த தானியங்கள் அல்லது பழச்சாறுகள் போன்ற சர்க்கரை உணவுகள் அல்லது பானங்களுடன் நம் நாளைத் தொடங்குவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யலாம்.

இப்படி வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உங்களை மந்தமாகவும், சோர்வாகவும் உணர வைக்கலாம். இதை தவிர நாளடைவில் இன்சுலின் எதிர்ப்பு திறனுக்கு பங்களிக்கிறது.பச்சை காய்கறிகள் மிகவும் நன்மையானது தான்.

ஆனால் அவை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது.பச்சை காய்கறிகளில் இருக்கும் அதிக அளவிலான நார்ச்சத்து வயிற்றை நிறைத்துவிடும். ஆனால் இது அடி வயிறு வலி, வயிறு இறுக்கிப் பிடித்தல் போன்ற உபாதைகளை உண்டாக்கக்கூடியது.

ஒருபோதும் வெறும் வயிற்றில் உண்ண கூடாத உணவுகள் | Dont Eating Some Food On Empty Stomach Bad Issue

 

மிக முக்கியமாக காரமான உணவுகள் எடுத்துக்கொள்ள கூடாது.மிளகாய், பூண்டு மற்றும் சூடான சாஸ்கள் போன்ற மசாலாப் பொருட்கள் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தி நமக்கு பிரச்சனைகளை உண்டாக்கலாம்.

அதிலும் குறிப்பாக இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது வயிற்றில் பிரச்சனைகள் உண்டாகிறது. இந்த உணவுகள் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தி நமக்கு பிரச்சனைகளை உண்டாக்கலாம்.

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட கூடாது. வாழைப்பழத்தில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், மக்னீசியம் உடலில் அதிகரித்து, கால்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். எனவே எக்காரணம் கொண்டும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.