சருமத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம். ஆனால் குளிர்காலத்தில் நமது சருமம் மிகவும் வறட்ச்சியாக இருக்கும். இதற்கு காரணம் என்னவென்று யாராவது யோசித்து உள்ளீர்களா?

எலர் தோல் நமது சருமத்தை மிகவும் கூர்மையாக பாதிக்கும். தோல் வறட்ச்சி அடைய பல காரணங்கள் இருக்கும். நமது உடல் குளிர்காலத்தில் தண்ணீரை கேட்காது.

இதனால் சருமம் அப்படியே ஈரப்பதத்தை இழக்கும். இதனால் தோல் வறட்சியடையும். இந்த சரும வறட்சியை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.

சரும வறட்ச்சிக்கு இன்றே முற்றுப்புள்ளி - இந்த பொருட்கள் போதும் | How To Get Rid Of Dry Skin Health Beauty

 சரும வறட்சி

Moisturizer தவறாமல் பயன்படுத்துங்கள் - குளிர்காலத்தில் சருமத்தின் ஈரப்பதம் விரைவாக குறையும். எனவே, குளித்த பின்னர் இரவில் தூங்குவதற்கு முன்பும் திக்கான moisturizer அல்லது body lotion பயன்படுத்துவது மிகவும் அவசியம். அப்போது தான் நமது சருமம் ஈரப்பதமாக இருக்கும். 

 சூடான நீரில் குளிப்பதைத் தவிர்க்கவும் -குளிர்காலத்தில் உல்லோரும் சூடான நீரில் குளிப்பதையே விரும்புகிறார்கள்.  ஆனால் அதிக சூடான நீரில் குளிப்பது உடலுக்கு நல்லதல்ல. காரணம் அதிக சூடான நீர் சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்களை நீக்கிவிடும். எனவே, வெதுவெதுப்பான நீரில் குளிப்பது சருமத்திற்கு நன்மை தரும். 

சரும வறட்ச்சிக்கு இன்றே முற்றுப்புள்ளி - இந்த பொருட்கள் போதும் | How To Get Rid Of Dry Skin Health Beauty

மென்மையான சோப்பைப் பயன்படுத்துங்கள் - இரசாயனங்கள் மற்றும் அதிக நுரை கொண்ட சோப்புகள் சருமத்தை மேலும் வறட்சியாக்கும். எனவே மைல்டான, மூலிகை அல்லது Moisturizering soap பயன்படுத்துவது நல்லது.

நிறைய தண்ணீர் குடியுங்கள் - குளிர்காலத்தில் தாகம் குறைவாக இருக்கும், ஆனால் உடலில் நீர் குறைந்தால் சருமம் வறண்டுவிடும். தாகம் எடுத்தாலும் எடுக்கவில்லை என்றாலும் தினமும் குறைந்தது 7-8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது அவசியம்.

சரும வறட்ச்சிக்கு இன்றே முற்றுப்புள்ளி - இந்த பொருட்கள் போதும் | How To Get Rid Of Dry Skin Health Beauty

உணவில் கவனம் செலுத்துங்கள் - ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவுகள் (வால்நட், ஆளி விதைகள்), பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் சருமத்திற்கு உள்ளிருந்து ஊட்டமளிக்கும். இந்த உணவுகளை களிர்காலத்தில் உண்ணுவது நல்லது. 

இரவு நேர சருமப் பராமரிப்பு - தூங்குவதற்கு முன் முகத்தை சுத்தம் செய்து, Night cream அல்லது தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் தடவினால் சருமம் மென்மையாகவும் பொலிவாகவும் இருக்கும்.