எரிவாயு சிலிண்டரின் விலைகளை அதிகரிக்க இரு உள்நாட்டு நிறுவனங்கள் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த இரண்டு எரிவாயு விநியோக நிறுவனங்களின் கோரிக்கை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.