இந்த உலகில் இருக்கும் அனைத்து மனிதர்களும் ஏதோ ஒரு வகையில் புத்திகூர்மையாகத்தான் இருப்பார்கள். சிலர் புத்திசாலியாக இருப்பார்கள் சிலர் அறிவாழியாக இருப்பார்கள்.
ஆனால் மனிதனுக்கே உரிய ஆறாம் அறிவு என்று ஒன்று உள்ளது. அதை சிலர் சரிவர பயன்படுத்துவதில்லை. அந்த வகையில் ஆறாம் அறிவை சிறப்பாக பயன்படுத்தக்கூடிய ராசிகள் யார்யார் என்பதை இங்கு பார்ப்போம்.
1.கடகம்
இவர்கள் மிகவும் உணர்திறன் கொண்டவர்கள். பிறர் என்ன நினைக்கின்றனர் என்பதை துல்லியமாக கண்டுபிடிக்கும் அளவிற்கு இவர்கள் உணர்திறன் கொண்டவர்கள்.
இவர்கள் கடினமாக உழைக்கக்கூடியவர்கள். இவர்கள் அன்பு கருணை உள்ளம் கொண்டவர்கள். எப்போதும் எல்லோரையும் விடவும் ஒரு படிநிலை கூடுதலாக இருக்க நினைப்பார்கள். இவர்களிடம் இயற்கையாகவே இந்த பண்பு காணப்படும்.
2.கன்னி
கன்னி ராசியை புதன் அட்சி செய்து வருகிறார். புதன் நுண்ணறிவை கொடுக்கும் கடவுளாவார். இதனால் இவர்கள் எந்த ஒரு வேலையையும் பகுப்பாய்வு செய்து நடைமுறைக்கு ஏற்ற வகையில் செயல்படுத்தக்கூடியவர்கள்.
எந்த ஒரு தவறான விஷயமும் இவர்கள் கண்களில் இருந்து தப்பாது. இந்த அளவிற்கு புத்திகூர்மை கொண்டவர்கள். எந்த வேலையையும் சரியாக திட்டமிட்டு செய்வார்கள்.
3.மீனம்
இவர்கள் மிகவும் இரக்க குணம் கொண்டவர்கள். இவர்களுக்கு வாழ்கை துணை கிடைத்தால் அவர்கள் மிகவும் அதிஸ்டசாலிகள் என்று தான் கூற வேண்டும்.
தன்னை சுற்றியுள்ளவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பாாகள். கற்பனை திறனில் மிதக்கும் ராசியினர் இவர்கள். இவர்களின் சிந்தனையால் பல புதிய விஷயங்களை செய்வார்கள்.