உழைக்கும் பணம் வீண் விரயமாக போகாமல் அது நம்மிடம் அப்படியே இருப்பதற்கு சில சாஸ்திர பரிகாரத்தை தொடர்ந்து பார்க்க போகிறோம்.
நமது தேவையை நிறைவேற்றி கொள்வதற்கு பணம் தான் முக்கிய காரணமாக அமைகிறது. இந்த பணத்தை நமக்கே தெரியாமல் நாம் வீணாக செலவு செய்கிறோம்.
தேவைக்கு மட்டுமே செலவழிப்பது நல்லது. இதற்காக நம் வீட்டின் ஈசான்ய மூலையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வடகிழக்கு மூலையில் குப்பைகளை போட கூடாது.
இதை தவறாமல் செய்வதால் வீட்டில் பணம் மட்டும் அல்ல மகிழ்ச்சி, அமைதி நிலைத்திருக்கும் .விட்டில் பால் சுரக்கும் செடிகள் மற்றும் முட்செடிகளை வீட்டிற்குள் வளர்க்க கூடாது.
அதை அப்புறப்படுத்தி வளர்க்கலாம். இந்த செடிகளை வெட்டி வீசுவது மிகவும் நல்லது. வீட்டின் குளிலறை மற்றும் களிப்பறையை எப்போதும் மூடியே வைக்க வேண்டும்.
இதை திறந்து வைப்பதால் அது வீட்டில் கெட்ட சக்திகளை ஈர்க்க கூடிய சக்தியை கொண்டு வரும். தெய்வத்திற்கு விளக்கேற்றும் போது மகாலட்சுமி விளக்கேற்றினால் அது நன்மை தரும்.
உங்கள் செல்வத்தை மேம்படுத்த குபேரனின் புகைப்படம் அல்லது சிலையை வீட்டில் வைக்கவும். இவரை வீட்டின் வடக்குதிசையில் வைத்தல் மிகவும் அவசியமாகும்.
இந்த மாற்று வழிகளை செய்தால் நிச்சயம் செல்வம் வீடு தேடி வரும் பணம் கையில் தஙகும்.