அதிகமாக தேநீர் அருந்துவது, புகைப்பது மற்றும் வேறு சில பாவணைகள் போன்ற காரணங்களால் சிலருக்கு பற்கள் பார்ப்பதற்கு மஞ்சளாகவே இருக்கும்.
அத்துடன் போதுமான பராமரிப்பு இன்மை, உடல்நல கோளாறுகள், மருந்து பாவனை உள்ளிட்ட மருத்துவ காரணங்களாலும் பற்களில் ஏகப்பட்ட பிரச்சினைகள் வரலாம். இவற்றை சரிசெய்ய எமது முன்னோர் அடுப்பு கரியுடன் உப்பு கலந்து பயன்படுத்தி வந்துள்ளனர்.
சுமாராக 20 ஆம் நூற்றாண்டுகளாக இந்த பழக்கம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அடுப்பு கரி இல்லாதவர்கள் நிலக்கரி, மரத்தூள் அல்லது தேங்காய் ஓடுகள் போன்றவற்றை பயன்படுத்தியுள்ளனர். நுண்ணிய கார்பன் பொடி என்றும் கூறலாம்.
பற்களை வெண்மையாக்குவதற்கு பயன்படுத்தப்படும் அடுப்பு சரியை எவ்வாறு பயன்படுத்தினால் அசௌகரியங்கள் இருக்காது என்றும், அதனை பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள் பற்றியும் பதிவில் பார்க்கலாம்.
1. பாக்டீரியா வளர்ச்சி
கடைகளில் விற்பனை செய்யப்படும் பற்பசையை விட கரியில் கறைகளை அகற்றும் பதார்த்தங்கள் உள்ளன. அதனால் அவை பற்களை வெண்மையாக்குகின்றன. இது வாயிலிருந்து நச்சுகள் மற்றும் பாக்டீரியாக்களையும் அதற்றும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
2. வெண்மையாக்கும்
சில பானங்கள் மற்றும் உணவுகளை தொடர்ந்து குடிக்கும் பழக்கம் இருந்தால் பற்களில் கறை படிய வாய்ப்பு உள்ளது. அதனை ஆரம்பத்தில் கவனிக்காமல் இருந்தால் பற்கள் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். கரியை பயன்படுத்தி பற்களை துலக்கும் பொழுது பற்களில் நீண்ட நாட்களாக படிந்திருக்கும் கறைகள் மறையும்.
வேறு பலன்கள்
- கரியை கடைகளில் அல்லது ஆன்லைன்கள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக வீடுகளில் இருக்கும் அடுப்பில் இருந்து இலகுவாக பெற்றுக் கொள்ளலாம்.
- கரி பயன்படுத்தி பற்களை துலக்கிய பின்னர் மவுத்வாஷ் பயன்படுத்தி வாயை நன்றாக கழுவி விட வேண்டும். இப்படி செய்தால் வாயில் இருந்து வரும் துர்நாற்றம் நின்று விடும்.
- கரி பற்பசை 4 வாரங்களுக்குள் பற்களை துலக்கினால் நல்ல மாற்றம் காணலாம்.
- கரியை பயன்படுத்தி பற்களை துலக்கும் பொழுது பல்சோத்தை, பற்களில் இருக்கும் பாக்டீரியாக்கள், ஈறுகளில் இருக்கும் பிரச்சினை, இரத்த கசிவு மற்றும் பற்கள் முன்னோக்கி வருதல் உள்ளிட்ட பிரச்சினைகள் சரியாகும்.
- இதனை பெரியவர்களை விட சிறியவர்கள் தொடர்ந்து செய்யும் பொழுது அவர்கள் வளர்ந்த பின்னர் பற்கள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.