பாரம்பரிய தென்னிந்திய இனிப்பு பண்டங்களின் பட்டியிலில் பொட்டுக்கடலை உருண்டை முக்கிய இடம் வகிக்கின்றது.
ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பொட்டுக்கடலை உருண்டை, மிகவும் எளிதான இனிப்புகளில் ஒன்றாகும், இதை செய்வதற்கு ஆழமாக வறுக்கவோ அல்லது அதிக முயற்சி எடுக்கவோ தேவையில்லை.
வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வகையில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய, மொறுமொறுப்பு மற்றும் லேசான ஏலக்காய் சுவையுடன் அசத்தல் பொட்டுக்கடலை உருண்டை எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலை
வெல்லம்
ஏலக்காய் தூள்
நெய்
செய்முறை
முதலில், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெல்லத்தை அளந்து, சேர்த்து, தண்ணீர் அதில் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் 2 நிமிடங்களுக்கு நன்றாக சூடாக்கி, வெல்லம் கரைய விட்டு வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பொட்டுக்கடலையை பொன்நிறமாக வறுத்து தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் வடிகட்டிய வெல்ல பாகை சூடாக்கி, அது குமிழியாகி கெட்டியாக மாறி பாகு பதத்துக்கு வரும் போது, அடுப்பை அணைத்து விட வேண்டும்.
அதன் பிறகு, வெல்ல பாகுடன் ஏலக்காய் தூள், வறுத்த பொட்டுக்கடலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் கைகளால் கையாளும் அளவுக்கு பதமான சூட்டில் விரும்பிய அளவில் சிறிய உருண்டைகளாக உருட்டி, காயவிட்டு எடுத்தால் அவ்வளவு தான் அருமையான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த பொட்டுக்கடலை உருண்டை தயார்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, காற்று புகாத கொள்கலனில் சேமிக்கத்து வைத்து மாதகணக்கில் பயன்படுத்தலாம்.