நாடு முழுவதும் நடைமுறை படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு நாளை (17) அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படுகிறது.
இதற்கு அமைவாக நாளை முதல் தேசிய அடையாள அட்டையை அடிப்படையாகக் கொண்டு அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வீட்டில் இருந்து வெளியே செல்வதற்கு அனுமதி உண்டு. மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும்..
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பிரிவினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைவாக கடந்த 13 ஆம் திகதி இரவு 11.00 மணி முதல், நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தும் வகையில் பயணக் கட்டுப்பாட்டுக்கு ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டார்.
இருப்பினும் அத்தியாவசிய சேவைகளுக்கு எந்தவித தடையுமின்றி இதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
முழு நேர பயணக் கட்டுப்பாடு நாளை நீக்கம்!
- Master Admin
- 16 May 2021
- (1402)

தொடர்புடைய செய்திகள்
- 19 January 2021
- (514)
மாணவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை – வதந்...
- 06 April 2024
- (711)
2024ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தில்...
- 08 February 2021
- (554)
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணியில்...
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.