ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், கேதார யோகம் 500 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படுகிறது, இதன் காரணமாக குறிப்பிட்ட சில ராசியினருக்கு திடீர் பண வரவு மற்றும் அதிர்ஸ்டம் கிடைக்கப்போகின்றது.
கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
500 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்டும் இந்த கேதார ராஜயோகத்தின் போது 7 கிரகங்கள் நான்கு ராசிகளில் அமையும். இந்த ராஜயோகத்தின் கலவை அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்தவகையில் குறிப்பிட்ட 3 ராசியினருக்கு இந்த நேரத்தில் திடீர் பண லாபமும் அதிர்ஷ்டமும் வந்து சேரும் அப்படி அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியினரின் ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன் மற்றும் புதன் இருப்பதால் கேதார ராஜயோகம் நல்ல பலன்களை கொடுக்கும்.
சூரியன் 10 ஆம் வீட்டிலும், வருமான வீட்டில் சனியும் அமைந்திருப்பதால் இந்த காலப்பகுதியில் தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.நினைத்த காரியங்கள் அனைத்தும் விரைவில் நடப்பதை காண்பீர்கள்.
மிதுனம்
மிதுன ராசியினர் ஜாதகத்தில் சூரிய பகவான் 8வது வீட்டிலும், சனி பகவான் 11வது வீட்டிலும் அமைந்திருப்பதால் கேதார யோகத்தால் சிறந்த பலன்களை பெருவார்கள்.
இந்த காலப்பகுதியில் காதல் உறவில் இருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. மாணவர்களுக்கு தேர்விலும் வணிகத்தில் ஈடுப்படுபவர்களுக்கு வியாபாரத்திலும் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்.
துலாம்
துலா ராசியினருக்கு கேதார ராஜயோகம் சாதகமான பலன்களை கொடுக்கும்.எனவே, இந்த காலப்பகுதியில் உங்கள் மரியாதை மற்றும் அந்தஸ்து உயரும்.
திரைப்பட துறையில் அல்லது விளையாட்டு வீரராக இருந்தால் புகழின் உச்சத்துக்கு செல்வீர்கள்.அரசியலில் இருப்பவர்களுக்கு உயர் பதவி அமையும்.
நிதி நிலைமை சிறப்பாக இருக்கும் அதே சமயம் குடும்பத்திலும் மகிழ்ச்சியாக சூழல் உருவாகும். இந்த காலப்பகுதியில் நினைத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும்.