மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே தங்களிளுக்கு இறுதிவரையில் ஒரு துணை உண்மையாகவும் சேர்மையாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
இது சொல்லும் போது எளிமையாக இருந்தாலும் அப்படிப்பட்ட உண்மையாக துணையை பெறுவது மிகவும் சவாலான விடயம் என்றே சொல்ல வேண்டும்.காதல் வாழ்க்கையை அனைவரும் விரும்பினாலும் சிலருக்கு மட்டுமே அது உண்மையான மகிழ்ச்சியை கொடுக்கின்றது.
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் காதல் விடயத்தில் அதிர்ஷ்டம் அற்றவர்களாக இருப்பார்களாம்.
இவர்கள் எவ்வளவு போராடினாலும் இவர்களின் ஆசைப்படி ஒரு வாழ்க்கை துணை அமைவது கடினமாக இருக்கும். அப்படி காதலில் அதிர்ஷ்டம் அற்ற ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மீனம்
மீன ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதீத கற்பனை ஆற்றல் கொண்டவர்களாக இருப்பதால், இவர்கள் வாழவேண்டும் என நினைக்கும் வாழ்க்கையை முதலில் கற்பனை உவகில் தான் வாழ்கின்றார்கள்.
காதலை பொறுத்தமட்டில் இவர்கள் மிகவும் துர்திஷ்டசாலிகள் என்றே கூறவேண்டும். இவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றதுணையை இவர்களால் அடையவே முடியாது.
இவர்கள் மிகவும் மென்மையாக மனம் கொண்டவர்களாகவும் அதீத கருணை உள்ளம் கொண்டவர்களாகவும், எளிதில் உணர்ச்சிவசப்படும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் இந்த குணத்தால், காதலில் தோல்சியை அல்லது நிர்ந்தர பிரிவை அனுபவிக்க நேரிடும்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் எந்த விடயத்திலும் முழுமையையும் நேர்த்தியையும் விரும்பும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசியினர் காதல் விடயத்திலும் அதே குணங்களை கொண்டிருப்பதால், மற்றவர்களால் இவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலை ஏற்படக்கூடும்.
எனவே பெரும்பாலும் இவர்களின் காதல் வாழ்க்கை இவர்களின் விருப்படி அமையாது. இந்த ராசியினர் காதல் விடயத்தில் அதிஷ்டம் அற்றவர்களாக இருப்பார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் காதலில் துரதிர்ஷ்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு இயல்பாகவே தனிமை குறித்த பயம் எப்போதும் இருக்கும்.
இதன் விளைவாக இவர்கள் தங்களின் துணையை கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இவர்களின் இந்த பயம் துணைக்கு அடிமைப்படுத்துவதாக தெரிவதால், இவர்களின் காதல் உறவில் மகிழ்ச்சி இருக்காது. இவர்கள் கெரும்பாலும் இறுதியில் தனிமையை அனுபவிக்க நேரிடும்.