*401# என்ற இலக்கத்தை டயல் செய்வது ஆன்லைன் மோசடிக்கு வழிவகுக்கும் என  இந்திய தொலைத்தொடர்புத் துறை எச்சரித்துள்ளது.

தற்போது அனைத்து சேவைகளும் டிஜிட்டல் மயமாகி வருவதால் குற்றங்களும், மோசடிகளும் அதிகமாக நடைபெறுகின்றன.

அந்த வகையில், *401# என்ற குறிப்பிட்ட மொபைல் எண்ணை டயல் செய்வதால் ஆன்லைன் மோசடிகள் அதிகமாகி வருகின்றது என சைபர் கிரைம் அறிவித்துள்ளது.

இந்த மோசடியை செய்பவர்கள் முதலில் “பார்சல் ஒன்று வந்திருப்பதாகவும், அதனை டெலிவரி செய்ய வேண்டிய நபர் முகவரி தடுமாற்றத்தால் தவித்து வருவதாகவும், அவரை உடனடியாக இந்த எண்ணில் தொடர்புகொண்டு வழிகாட்டுமாறும்” கூறுவார்கள்.

தொலைபேசியில் *401# டயல் செய்தால் ஆபத்தா? எச்சரிக்கை | Fraud Alert On Dialing 401

பின்னர் அழைப்பிற்காக மொபைல் எண் ஒன்றை வழங்குவதோடு, அதன் முன்பாக *401# என்ற எண்ணிற்கு டயல் செய்ய அறிவுறுத்துவார்கள்.

இந்த அழைப்பை ஏற்படுத்திய பின்னர் சைபர் கிரிமினல்கள் தங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் எளிதில் பெற்றுக் கொள்வார்கள்.

இந்நிலையில், குறித்த மோசடியை கண்டுபிடித்த இந்திய தொலைத்தொடர்புத் துறை எச்சரிக்கை ஒன்றை பொது மக்களுக்கு விடுத்துள்ளது.

தொலைபேசியில் *401# டயல் செய்தால் ஆபத்தா? எச்சரிக்கை | Fraud Alert On Dialing 401

அதாவது, “செல்போன் பயன்படுத்துவோர் எக்காரணம் கொண்டும், எவர் வலியுறுத்தினாலும் *401# என்ற எண்ணிற்கு அழைப்பு விடுக்கக்கூடாது. இந்த அழைப்புக்கள் ஆன்லைன் வாயிலாக வருவதற்கும் வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றது. ஆகவே பயனர்கள் சற்று கவனமாக இருப்பது சிறந்தது.” என கூறியுள்ளது.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.