பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கு தூக்கத்தில் கனவு வருவது இயல்பான விடயம் தான். 

அறிவியல் எவ்வளவு வளர்ச்சியடைந்தாலும் துள்ளியமான காரணம் சொல்லமுடியாத சில விடயங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது என்பதற்கு கனவுகளும் சான்று பகர்கின்றன.

நாம் தூங்கும் போது வரும் கனவுகள் சிலருக்கு நினைவில் இருக்கும்.சிலருக்கு இருக்காது. ஆனால் புராணங்கள் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின் படி கனவுகள் குறிப்பிட்ட விடயங்களை எச்சரிக்கின்ற தன்மை கொண்டவை என குறிப்பிடப்படுகின்றது.

கனவு அறிவியலின் படி, நமது கனவுகளில் சில நனவாகும் என்றும் கனவுகள் எதிர்காலம் குறித்து மறைமுகமாக எச்சரிப்பதாகவும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

கனவுகள் எதிர்காலம் குறித்து எச்சரிக்குமா? இந்த கனவுகள் வந்தால் ஜாக்கிரதையா இருங்க | Can Dreams Be Warning Signsகனவு சாஸ்திரத்தின் பிரகாரம் கனவில் வரும் சில விடயங்கள் மங்களகரமானதாக கருதப்படும் அதே வேளை சில விடயங்களை கனவில் காண்பது எதிர்காலத்தில் நிகழவிருக்கும் ஆபத்து குறித்து ஆழ் மனம் எச்சரிப்பதாக அமைகின்றது.

இப்படி எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஆபத்தை உணர்த்தும் சில கனவுகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம். 

கனவுகள் எதிர்காலம் குறித்து எச்சரிக்குமா? இந்த கனவுகள் வந்தால் ஜாக்கிரதையா இருங்க | Can Dreams Be Warning Signsகழுதையில் சவாரி செய்வதை போன்ற கனவு வருவது மிகவும் ஆபத்தான அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. 

குறிப்பாக தெற்கு நோக்கி சாவாரி செய்வது போன்று கனவில் கண்டால் உடல் ஆரோக்கியம் பாரியளவில் பாதிக்கப்பட போகின்றது என அர்த்தம். கொடிய நோய்களுக்கு ஆளாக வேண்டி ஏற்படலாம்.

வியாசரின் ராம்சரிதமனாஸில் இராவணன் இறப்பதற்கு முன்னர் இது போன்ற கனவு கண்டதாக செல்லப்பட்டிருக்கின்றது. இது போன்று கனவு வந்தால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

கனவுகள் எதிர்காலம் குறித்து எச்சரிக்குமா? இந்த கனவுகள் வந்தால் ஜாக்கிரதையா இருங்க | Can Dreams Be Warning Signsயாரேனும் திருமணம் செய்து கொள்வதை போன்ற கனவு தோன்றுவதும் ஆபத்தை எச்சரிப்பதாக அமையும். 

இந்த கனவு எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் பெரிய பிரச்சினையின் எச்சரிக்கையாகும். குறிப்பாக தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்பாரத அளவுக்கு சிக்கல்களை சந்திக்க நேரிடும். 

மரணத்துக்கு நிகரான துன்பத்தை விரைவில் சந்திக்க வேண்டி ஏற்படலாம். இவ்வாறு கனவு கண்டால் முறையான பரிகாரத்தை கண்டறிந்து செய்துவிடுவது சற்று ஆறுதல் கொடுக்கும். 

கனவுகள் எதிர்காலம் குறித்து எச்சரிக்குமா? இந்த கனவுகள் வந்தால் ஜாக்கிரதையா இருங்க | Can Dreams Be Warning Signsஎண்ணெய் தடவுவதை போன்ற கனவு கண்டால் எதிர்கால வாழ்க்கையில் பெரியபிரச்சினை காத்திருக்கின்றது என்று அர்த்தம். 

உடல் நலம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த கனவு ஆரோக்கிய பாதிபின் அறிகுறியான கனவு சாஸ்த்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.

கனவுகள் எதிர்காலம் குறித்து எச்சரிக்குமா? இந்த கனவுகள் வந்தால் ஜாக்கிரதையா இருங்க | Can Dreams Be Warning Signsமரம் முறிந்து விழுவதை போன்று கனவு கண்டால், எதிர்காலத்தில் ஏதேனும் பெரிய நோய் அல்லது பெரிய விபத்தை எதிர்கொள்ள வேண்டி ஏற்படலாம்.

இது போன்ற கனவுகள் எதிர் காலத்தில் நமக்கு நடக்கவிருக்கும் தீமைகள் குறித்து முன்கூட்டியே எச்சரிப்பதாக இருக்கும்.