பொதுவாகவே வீட்டில் செய்யும் சாதம் சில நேரங்களில் மிச்சம் இருக்கும்.இதனை அனேகமானோர் தூக்கியெறிந்து விடுவார்கள். 

இனிமேல் சாதம் மிஞ்சி விட்டால், உடனே அதை வைத்து  லேயர் பரோட்டா செய்து கொடுங்க. வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

சாதம் - 1 கப் 

தண்ணீர் - 1/2 கப் 

 மைதா - 2 கப் 

உப்பு - சுவைக்கேற்ப 

எண்ணெய் - 1 தே.கரண்டி

சமைத்த சாதம் மிஞ்சிவிட்டதா? அப்போ லேயர் பரோட்டா செய்து சாப்பிடுங்க... | Layer Parotta Recipe With Leftover Rice

செய்முறை

முதலில் 1 கப் சாதம், 1/2 கப் நீரை மிக்சர் ஜாரில் சேர்ச்து  பேஸ்ட் போன்ற பததில் அரைத்துக் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர்  அதனுடன் 2 கப் மைதா மாவை சேர்த்து, பரோட்டாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து, 1/4 கப்பிற்கு சற்று அதிகமாக நீரை ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.

சமைத்த சாதம் மிஞ்சிவிட்டதா? அப்போ லேயர் பரோட்டா செய்து சாப்பிடுங்க... | Layer Parotta Recipe With Leftover Rice

பின்பு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, மேலே 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தடவி, மூடி வைத்து 30 நிமிடங்கள் வரை ஊறவிட வேண்டும்.

பின்னர் கைகளில் எண்ணெய் தடவிக் கொண்டு பிசைந்து வைத்துள்ள மாவை மீண்டும் ஒரு 2 நிமிடம் வரை  பிசைந்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த மாவை சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும்.  பிறகு பரோட்டா தேய்க்கும் இடத்தில் எண்ணெய் தடவி, ஒரு உருண்டையை வைத்து, நன்கு மெல்லிசாக தேய்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

சமைத்த சாதம் மிஞ்சிவிட்டதா? அப்போ லேயர் பரோட்டா செய்து சாப்பிடுங்க... | Layer Parotta Recipe With Leftover Rice

பின்னர் அதன் மேல் சிறிது மைதா மாவை தூவி கைகளால் தடவி, தேய்த்த மாவை எடுத்து, அப்படி கையில் உருட்டி வைக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் உருட்டி வைத்துள்ள பரோட்டாவை மாவை எடுத்து, அதிக அழுத்தம் கொடுக்காமல் லேசாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.

சமைத்த சாதம் மிஞ்சிவிட்டதா? அப்போ லேயர் பரோட்டா செய்து சாப்பிடுங்க... | Layer Parotta Recipe With Leftover Riceஇறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் நன்கு சூடானதும், தேய்த்து வைத்துள்ள பரோட்டாவை போட்டு, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும். 

பின் பரோட்டாவை சூடாக இருக்கும் போது கைகளால் நன்கு அடித்து விட்டால் மென்மையான லேயர் பரோட்டா தயார்.