எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.
ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.
அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.
எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்கள் எப்போதும் துணையை ஏமாற்றாமல், அவர்களை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்களாம். அப்படியானவர்கள் எந்த தேதியில் பிறந்திருப்பார்கள் என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
எண் 2 |
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் சந்திரன் ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மென்மையாக நடந்து கொள்வார்கள். சகிப்புத்தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். துணையை புரிந்து கொண்டு அவர்களுக்கு பிடித்தமானவர்களாக நடந்து கொள்வார்கள். உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்கி, உறவுகளுக்கு விசுவாசமானவர்களாக இருப்பார்கள். காதலை முழுமையாக வெளிக்காட்டி துணையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்கள். |
எண் 3 | 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் வியாழன்/குரு ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். சுயமரியாதை கொண்டவர்களாகவும் நேர்மையானவர்களாக இருப்பார்கள். துணைக்கு எல்லா விடயங்களையும் விட்டுக் கொடுப்பார்கள். பொறுப்பு உள்ளவர்களாக இருப்பதால் வீட்டில் ஒழுக்கத்துடன் நடந்து கொள்வார்கள். இவர்களின் நடத்தை வலிமையானவர்களாக வெளியில் காட்டும். |
எண் 6 | 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதிபதியாக அழகு, காதல், ஆடம்பரம், செல்வம், செழிப்பு, ஆகியவற்றை கொடுக்கும் சுக்கிரன் இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களை கவரும் தோற்றத்தில் இருப்பார்கள். அன்பானவர்களாகவும், காதல் உணர்வு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். துணையை மகிழ்ச்சியாக வைத்து கொள்வார்கள். அத்துடன் விசுவாசமாகவும் வைத்து கொள்கிறார்கள். நடத்தை மற்றும் நேர்மையான வாழ்க்கை துணையாக இருக்கிறார்கள். |