பொதுவாகவே நமது பேச்சை மற்றவர்கள் கேட்டு நடக்க வேண்டும் என்ற ஆசை எல்லா மனிதர்களிடம் நிச்சயம் இருக்கும். ஆனால் பெரும்பாலானவர்களின் புலம்பல் என்னவென்றால் என் பேச்சுக்கு மரியாதை கொடுப்பதில்லை என்பதாகத்தான் இருக்கும்.

இந்த பிரச்சினை கணவன் மனைவி உறவு தொடக்கம், பெற்றோர், பிள்ளைகள்  நிறுவன முகாமையாளர், பணியாளர்கள் என எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கின்றது.

உங்க பேச்சின் மதிப்பு உயரணுமா? அப்போ இந்த விடயத்தை அவசியம் கடைப்பிடிங்க! | Thirukkural Saying About How Do You Communicate

ஆனால் இதற்கான தீர்வை திருக்குறல் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கொடுத்துவிட்டது. என்றால் மிகையாகாது.

எல்லா காலங்களிலும் பொருந்தக்கூடிய வகையிலான வாழ்க்கை தத்துவங்களையும் ஒருசேர போதிக்கும்,உலக பொதுமறையான திருக்குறல் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்கவே முடியாது .

அந்தளவுக்கு உலகளாவிய ரீதியில் பைபிலுக்கு அடுத்தப்படியாக அதிகமான மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட நூல் என்ற பெருமையும் திருக்குறளுக்கு உண்டு.

உங்க பேச்சின் மதிப்பு உயரணுமா? அப்போ இந்த விடயத்தை அவசியம் கடைப்பிடிங்க! | Thirukkural Saying About How Do You Communicate

திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள், பதினென் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாக அறியப்படுகின்றது. வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நல்வழிகளையும் அந்த ஒரே நூலில் குறள் வழியாக நமக்கு திருவள்ளுவர் எடுத்துரைத்துள்ளார்.

திருக்குறளானது மொழி, இனம், மதம், சாதி, சமயம் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பொருந்தக்கூடியதாக இருப்பதே திருக்குறளின் சிறப்பு.

உங்க பேச்சின் மதிப்பு உயரணுமா? அப்போ இந்த விடயத்தை அவசியம் கடைப்பிடிங்க! | Thirukkural Saying About How Do You Communicate

இத்தனை சிறப்பு வாய்ந்த திருக்குறள் நூலிலில் சொல்வன்மை என்ற அதிகாரத்தில் நமது பேச்சாற்றல் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் ஒரு சிறந்த திருக்குறலின் விளக்கம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நாம் சொல்ல நினைத்த சொல்லை வெல்லக்கூடிய மற்றொரு சொல் இல்லை என்பதை நன்றாக அறிந்த பின்பே, அந்தச் சொல்லை மற்றவர்களிடம் சொல்ல வேண்டும்.

அதாவது நமது பேச்சு எப்படியிருக்க வேண்டும் என்றால், மற்றவர்கள் எதிர்த்து பேசவே முடியாத அளவுக்கு ஆற்றல் மிக்கதாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும்.

உங்க பேச்சின் மதிப்பு உயரணுமா? அப்போ இந்த விடயத்தை அவசியம் கடைப்பிடிங்க! | Thirukkural Saying About How Do You Communicate

மற்றவர்கள் அதை புரிந்துக்கொள்ளும் வகையில் சொல்லக்கூடியதாக இருந்தால் தான் அது சிறப்பான பேச்சாற்றலாக இருக்கும்.  வெறுமனே ஏதாவது ஒரு விடயம் குறித்து தினந்தோறும் புலம்பிக்கொண்டே இருக்கின்றீர்கள் என்றார் உங்களின் வார்த்தைகளுக்கு மற்றவர்கள் ஒருபோதும் மதிப்பளிக்க மாட்டார்கள்.

சொல்ல வேண்டிய விடயங்களை மற்றவர்கள் எதிர் கருத்து தெரிவிக்க முடியாத அளவுக்கு ஆராய்ந்து பின்னர் சரியான வார்த்தைகள் மூலம் தெளிவுகப்படுத்தும் போது உங்களின் வார்த்தைகளுக்கு எப்போதும் தனித்துவமான மரியாதை இருக்கும்.