வீட்டில் கற்பூரம் மற்றும் கிராம்பு இவற்றினை ஒன்றாக எரிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக பணம் என்றால் அனைவருக்கும் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை தானாகவே வந்துவிடும். அதிலும் செல்ல செழிப்புடன் வாழ வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு.
நமது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்கு மட்டுமின்றி, மன நிறைவையும், அமைதியையும் அளிக்கின்றது.
அவரவர்கள் செய்யும் வேலையைப் பொறுத்து பணத்தை சம்பாதித்து வருகின்றனர். ஆனால் இத்தகைய சூழ்நிலையில், பணம் மற்றும் செல்வம் வீட்டில் நிலைத்திருக்க வேண்டுமெனில் நேரமறை ஆற்றல் நிறைந்திருக்க வேண்டும்.
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு என சிறப்பு முக்கியத்துவம் உண்டு. எனவே, வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் பணம் மற்றும் செல்வம் அதிகரிக்கவும், லட்சுமி தேவியின் அருள் கிடைக்கவும் பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன.
அவற்றில் ஒன்று கற்பூர பரிகாரம் செய்வது. இந்த பதிவில் கற்பூர பரிகாரத்தை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பண பெட்டகத்தில் கற்பூரத்தை வைத்தால் நிதி பற்றாக்குறை, நிதி இழப்பை தவிர்ப்பதுடன், பணம் வருவதற்கான வழியும் திறக்கப்படும். மேலும் வீட்டில் மகிழ்ச்சி அமைதி பெருகுமாம்.
வீட்டில் காலை மற்றும் மாலையில் கற்பூரத்தை வைத்து ஆர்த்தி செய்வதால், வீட்டிலிருந்து எதிர்மறை சக்தி நீங்கும்.
வீட்டின் பிரதான வாசலில் கற்பரத்தை வைத்தால் தீய சக்திகள் வீட்டிற்குள் நுழையாது.
சமையலறையில் கற்பூரத்தை வைத்தால் பணப்பற்றாக்குறை தடுக்கப்படுவதுடன், பணம் சம்பாதிப்பதற்கான நல்ல வாய்ப்புகள் உருவாகும்.
கற்பூரத்தை பூஜை அறையில் வைத்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.