பொதுவாகவே ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் சற்று மென்மையானவர்களாகவும் பலம் குன்றியவர்களாகவும் கருதப்படுகின்றார்கள்.
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் பிறப்பிலேயே மனதளவிலும், உடலளவிலும் பலசாலிகளாக இருப்பார்களாம். இவர்களின் அகராதியில் முடியாது என்பதே இருக்காதாம்.
அப்படி ஆண்களுக்கு நிகரான உடல் வலிமையும் யாராலும் தோற்கடிக்க முடியாத மன உறுதியும் கொண்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
இந்த ராசியில் பிறந்த பெண்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், கேட்கவும், எல்லாவற்றிற்கும் மேலாக, அனைவராலும் உணரவும் ஒரு போதும் அச்சப்படுவது கிடையாது.
இவர்கள் பிறப்பிலேயே தன்னம்பிக்கை மற்றும் மனவலிமைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்களின் முன் உண்மையை வெளிப்படுத்தவும் தங்களின் கருத்துக்களை குறிப்பிடவும் ஒருபோதும் தயக்கம் காட்டுவது கிடையாது.
சிம்மம்
சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசி பெண்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் முதல் நிலை வகிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இவர்களுக்கு பிறப்பிலேயே தலைமைத்துவ குணங்கள் அதிகமான இருக்கும். யாருக்கும் அஞ்சாத திடமான தைரியம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் சுதந்திரத்துக்கும் உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் குணத்தை நிச்சயம் கொண்டிருபார்கள். எதிர்த்து போராடும் பண்புக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள்.
மேஷம்
நெருப்பு ராசியாக மேஷ ராசியினர் அவர்களின் உண்மைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் அதீத தன்னம்பிக்கை கடினமான சூழ்நிலைகளையும் எதிர்த்து பேராட இவர்களுக்கு அசாத்திய வலிமையை கொடுக்கின்றது.
இந்த ராசி பெண்கள் அனைவருக்கும் பிடித்தவர்களாக இல்லாவிட்டாலும், ஒன்று நிச்சயம் இவர்களின் தலைசிறந்த அணுகுமுறையை பார்த்து எதிரிகள் மிரண்டு போவார்கள்.