எம்பிலிப்பிட்டிய - மித்தெணிய வீதியின் ஶ்ரீ சம்புத்த ஜயந்த விகாரைக்கு முன்பாக கெப் ரக வாகனமொன்று அதற்கு எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த குறித்த இருவரும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

11 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.