பொதுவாகவே நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் பெருமளவில் தொடர்புபட்டிருப்பதாக எண்கணித ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகின்றது. 

எண்கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே ஆண்களை எளிமையாக வசீகரிக்கும் தோற்றமும் காந்த பார்வையும் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இப்படி நொடியில் ஈர்த்துவிடும் அளவுக்கும் ஆண்களின் கனவு கன்னிகளாக இருக்கும் பெண்கள் எந்தெந்த திகதிகளில் பிறந்தவர்கள் என இந்த பதிவில் பார்க்கலாம். 

எண் 3

12  மாதங்களில் எந்த மாதமாக இந்தாலும்  3, 12, 21 மற்றும் 30 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்கள் மிகவும் அழகிய தோற்றமும் கட்டுக்கோப்பான உடல் அமைப்பும் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்களுக்கு இயல்பாகவே மற்றவர்களை ஈர்க்கும் அளவுக்கு துடிப்பான ஆளுமை மற்றும்  பேச்சாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இந்த திகதிகளில் பிறந்த பெண்களுக்கு பெண் நண்பர்களை விட ஆண் நண்பர்கள் தான் அதிகமாக இருக்கும்.இவர்களின் குணம் மற்றும் அழகு ஆண்களை வெகுவாக ஈர்க்கின்றது.

எண் 5

எந்த மாதமாக இருந்தாலும் 5, 14 மற்றும் 23 ஆம் திகதிகளில் பிறந்த பெண்கள் இருக்கும் இடத்தில்  அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவர்களாக இருப்பார்கள். 

இந்த பெண்கள் பெரும்பாலும் விழாக்களிலும் முக்கிய சடங்குகளிலும் முக்கிய அம்சமாக இருப்பார்கள். அவர்களுக்கு  ஆண்களின் மனதை கவர்ந்திழுக்கும் ஆற்றல் பிறப்பிலேயே அதிகமாக இருக்கும். 

 

புதிய விடயங்களை முயற்சிப்பதில் அதிக ஆர்வம் காட்டிவரும் இவர்களுக்கு மக்களிடம் அதிகம் பேசுவது பிடித்தமான விடயமாக இருக்கும். 

இவர்களின் அழகிய தோற்றம் மட்டுமன்றி அசாத்திய தைரியமும், தன்னிச்சையான தன்மையும் இவர்களை ஆண்கள் அதிகம் விரும்புவதற்கு காரணமாக இருக்கும். 

எண் 7

அனைத்து மாதங்களிலும் 7, 16 மற்றும் 25 ஆம் திகதிகளில் பிறந்த பெண்கள் நகைச்சுவை தன்மை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க அதிகம் விரும்புபவர்களாக இருப்பார்கள். அதனால் ஒப்பனைகள் மீதும் விதவிதமான ஆடைகளை அணிவதிலும் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். 

இவர்களின் அதீத தைரியம் மற்றும் தன்னம்பிக்கை மற்றும் அழகு ஆண்களின் கனவு கன்னிகளாகவே இவர்களை மாற்றிவிடுகின்றது.