ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் பெயர்ச்சிக்கு முக்கிய இடம் கொடுக்கப்டுகின்றது. காரணம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றமானது 12 ராசிகளின் வாழ்விலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்த வகையில் நவ கிரகங்களில் சந்திரன் பெயர்ச்சியும் முக்கிய பங்கு வகிக்கின்றது.தற்போது சந்திரன் கும்ப ராசிக்குச் இடப்பெயர்ச்சியடைகின்றார்.
சனிபகவானின் சொந்த ராசியான கும்பத்தில் சந்திரன் நுழைவதால், இந்த நாளில் சித்தி யோகம் உருவாகப்போகின்றது.
இந்த யோகத்ததால் குறிப்பிட்ட சில ராசியினர் வாழ்வில் மிகப்பெரும் நல்ல திருப்பங்களை அனுபவிக்கப்போகின்றார்கள்.
அப்படி சித்தி யோகம் வாழ்வில் சகல செல்வ செழிப்பையும் பெற்று அசுர வேகத்தில் வளர்ச்சியடையப்போகும் ராசியினர் யார் யாரை் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் சித்தி யோகத்தால் வாழ்வில் பல்வேறு வகையிலும் சாதக பலன்களை அனுபவிக்கப்போகின்றார்கள்.
இந்த காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்கள் புதிய வேலையில் உயர் பதவியில் அமர்வதற்கான வாய்ப்பு அமையும். தற்போதைய வேலையில் பதவி உயர்வு பெறவும் வாய்ப்பு காணப்படுகின்றது.
உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறக்கூடியதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்சியான சூழல் உருவாகும். நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
தனுசு
தனுசு ராசியினருக்கும் இந்த சித்தி யோகம் நிதி நிலையில் எதிர்பாராத அளவுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் வருடமானம் அதிகரிக்கும். இருப்பினும் தவிர்க்க முடியாத காரணங்களினால் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றது.
திருமண உறவில் நெருக்கம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த கருத்துவேறுப்பாடுகள் நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு சித்தி யோகம் தொழில் மற்றும் பண விடயங்களில் அதிகளவான சாதக பலன்களை கொடுக்கப்போகின்றது.
வியாபாரத்தில் இருப்பவர்கள் திருப்திகரமான லாபத்தை பெறுவார்கள். தொழில் தளம் மற்றும் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
எதிர்பாராத பரிசுகள் அல்லது பண வரவுகளால் மனமகிழ்ச்சி ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது.