ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, காதல் வாழ்ககை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் அதிகளில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள், இயல்பாகவே ரகசியம் காப்பதில் கில்லாடிகளாக இருப்பார்களாம். வாழ்க்கை முழுவதும் கூட இவர்களால் ஒரு உண்மையை யாரிடமும் சொல்லாமல் இருக்க முடியும்.
அடிப்படி ரகசியங்களை மறைத்து வைப்பதில் அதீத ஆற்றல் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே மர்மமான இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் தனிப்பட்ட ரகசியங்களையும் சரி, மற்றவர்களின் ரகசியங்களையும் சரி வெளியில் சொல்வதை விரும்புவது கிடையாது.
இவர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக நம்பிக்கையை மதிக்கிறார்கள். நீங்கள் ஒன்றில் நம்பிக்கை வைத்தால், அவர்கள் அதை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள்.
அவர்களுக்கு, விசுவாசம் என்பது வெறும் வார்த்தை அல்ல இனால் இவர்களிடம் நம்பி சொல்லப்பட்ட ரகசியங்களை வாழ்நாள் முழுதும் காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
மகரம்
மகரம் ராசியில் பிறந்தவர்கள் ஒழுக்கமான மற்றும் பொறுப்பான மனநிலைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் ரகசியங்களை வைத்திருப்பதில் தலைமை நிர்வாக இருப்பார்கள். அவர்கள் தங்களின் மனதை நாடகம் அல்லது வதந்திகளில் மூழ்கிவிட மாட்டார்கள்.
இதனால் இவர்களிடம் சொல்லப்படும் ரகசியங்கள் எந்த நிலையிலும் மற்றவர் காதுகளுக்கு செல்லாது என்பதை உறுதியாக சொல்லாம்.
மீனம்
மீன ராசிக்காரனாக, எப்போதும் பேசுபவனை விட கேட்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இயல்பாகவே கற்பனை திறன் அதிகம் கொண்ட இவர்கள் மற்றவர்கள் உணர்வுகளை ஒரு பஞ்சு போல உள்வாங்கிக் கொள்வார்கள்.
யாராவது என்னிடம் நம்பிக்கை வைக்கும்போது, அவர்களின் உணர்ச்சிக்கு மிகுந்த மரியாதை கொடுக்கும் குணம் இவர்களிடம் இருக்கும். அதனால் ஒருவருடை தனிப்பட்ட விடயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்ளவே மாட்டார்கள்.