வேத சாஸ்திரங்களின்படி சுக்கிரன் லட்சுமியின் வடிவமாக கருதப்படுகிறது. புதன் நாராயணனின் வடிவமாக கருதப்படுகிறது. இந்த இரண்டும் உன்றாகும் போது லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது.இந்த உருவாக்கம் சுமார் 200 ஆண்டுகளின் பின் உருவாகின்றது.
இந்த யோகம் அனைத்து யோகங்களிலும் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. சுக்கிரனும் புதனும் எந்த ராசியில் ஒன்றாக சஞ்சரித்தாலும் இந்த யோகம் உருவாகும். இம்முறை இந்த யோகம் விஜய தசமி நாளில் லட்சுமி நாராயண யோகம் உருவாகப் போகிறது.
இதன் உருவாக்கம் துலாம் ராசியில் புதனும் சுக்கிரனும் ஒன்றாகச் செல்வதால் லட்சுமி நாராயண யோகம் ஏற்படுகிறது.இது மூன்று ராசிகளுக்கு நல்ல யோகத்தை தரப்போகிறது. இதனால் இந்த ராசிகளுக்கு லட்சுமி தேவியின் சிறப்பு அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.அந்த ராசிகள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
துலாம்
- லட்சுமி நாராயணர் யோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கொடுக்கும்.
- உங்களின் நிதி நிலை பன்மடங்கு உயரும்.
- வியாபாரத்தில் பொருளாதார லாபம் உண்டாகும்.
- பல நாட்கள் முடிக்கப்படாத வேலை விரைவில் முடியும் அது எந்த காரியமாக இருந்தாலும் முடியும்.
- திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் விலகி சந்தொஷமாக இருப்பீர்கள்.
மகரம்
- உங்கள் ராசியின் 10 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது.
- இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
- இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரும் லாபம் கிடைக்கும்.
- புதிதாக தொழிலைத் ஆரம்பிக்க இருப்பவர்களுக்கு இந்த யோகம் உதவியாக இருக்கும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைத்து பொறுப்பாக சம்பாதிப்பீர்கள்.
கும்பம்
- கும்ப ராசியின் 9 வது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உண்டாகிறது.
- இதனால் உங்களுக்கு செல்வ மழை கொட்டும்.
- இந்த யோகத்தால், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
- நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் அதில் அதிகப்படியான பணத்தின் வருமானத்தை பெறுவீர்கள்.
- உங்களால் குடும்பத்தில் பிரச்சனைகள் தீர்க்கப்படும்.