வெதுவெதுப்பான நீரை அடிக்கடி குடித்தால், என்னென்ன பிரச்சனைகள் சந்திக்க நேரிடும் என்ற பதிவே இதுவாகும்.
இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் வெதுவெதுப்பான குடிநீரையே பருகி வருகின்றனர். அதிலும் சளி, இருமல், காய்ச்சல் நேரங்கள் மட்டுமின்றி அனைத்து நேரங்களிலும், அடிக்கடி பருகி வருகின்றனர்.
வெதுவெதுப்பான நீர் எந்த அளவிற்கு நன்மையை அளிக்கின்றதோ, அதே போன்று அதில் சில கெடுதல்களும் இருக்கின்றது. ஆனால் இது ஒவ்வொருவரின் உடல் பழக்கத்தைப் பொருத்தே அமைகின்றது.
அவ்வாறு யாரெல்லாம் அடிக்கடி வெதுவெதுப்பான நீரை பருகக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வெதுவெதுப்பான நீரை பருகுவதால் அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படுவதுடன், முக்கியமாக தூங்கும் முன்பு குடிப்பது தூக்கத்தை கெடுக்கின்றது.
சளி, இருமல், ஜலதோஷம் இருப்பவர்கள் வெந்நீர் பருகுவதால், ஆறுதல் கிடைப்பதாக உணர்கின்றனர். ஆனால் இவ்வாறு குடிப்பதால் தொண்டையில் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆதலால் இவர்கள் வெந்நீர் குடிக்காமல் வெதுவெதுப்பான நீரை பருகலாம்.
செரிமான பிரச்சனைக்கு தீர்வு அளிப்பதாக வெதுவெதுப்பான நீரை நாம் பருகுவதுடன், குழந்தைகளுக்கும் கொடுத்து வருகின்றோம். ஆனால் குழந்தைகளின் செரிமான குடல் மிகவும் மிருதுவானதாக இருக்கும் என்பதால், வயிறு பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
அதிகமாக வெதுவெதுப்பான நீரை பருகும்போது கல்லீரல் பாதிக்கும் வாய்ப்புகள் உருவாகலாம். ஏனெனில் வெந்நீர் கல்லீரலுக்கு அதிகப்படியான அழுத்தத்தினைக் கொடுக்கின்றது.
அதிலும் பல்வலி உள்ளவர்கள் சூடான அல்லது குளிர்ந்த நீரை குடிப்பதால் பற்களில் பிரச்சனை அதிகரிக்கும் என்பதால், சாதாரண நீரையே பருகலாம்.
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் உடலுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது.