அமெரிக்கா 124 நாட்களில் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி உலகளவில் முதல் நாடாக விளங்குகிறது.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதலில் தடுப்பூசி செலுத்த மக்கள் தயக்கம் காட்டினார். இந்தியாவில் 2-வது கொரோனா அலை தீவிரமாக பரவியதுடன், அதிகமானோரை உயிரிழக்க செய்து வருகிறது.

 

இதனால் பொதுமக்கள் உயிரை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியா 130 நாட்களில் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்து சாதனைப் படைத்துள்ளது.

 

கோப்புப்படம்

 

 

அமெரிக்கா 124 நாட்களில் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி முதலிடம் வகிக்கிறது. இந்தியா 2-வது இடம் பிடித்துள்ளது.

 

மேலும் 60 வயதிற்கு மேற்பட்டோரில் 42 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.