கொரோனா 2-வது அலையில் இந்திய அளவில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது கவலை அளிக்கும் விதமாக உள்ளது.

 

இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் சூறாவளியாக சுழன்று அடித்து வருகிறது. இந்த முறை உயிரிழப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இந்தியாவில் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை தாண்டிய நிலையில் இருந்த உயிரிழப்பை காட்டிலும், தற்போது 2 லட்சத்திற்கு கீழ் குறைந்த நிலையில் உள்ள உயிரிழப்பு அதிகமாக உள்ளது.

 

அதேபோல் தமிழகத்திலும் உயிரிழப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இதுவரை தினசரி உயிரிழப்பு 300-ஐ தாண்டிய நிலையில் இருந்தது. இன்று 400-ஐ தாண்டி 467 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய விட 70 பேர் அதிகமாக உயிரிழந்துள்ளனர். சென்னையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.

 

மாவட்டம் வாரியாக இன்றைய பாதிப்பு, டிஸ்சார்ஜ், உயிரிழப்பு பின்வருமாறு:-

 

 

மாவட்டம் பாதிப்பு டிஸ்சார்ஜ் உயிரிழப்பு
சென்னை 5913 4590 109
செங்கல்பட்டு 2226 2173 40
அரியலூர் 283 135 0
கோவை 3243 2244 25
கடலூர் 864 363 8
தர்மபுரி 387 198 2
திண்டுக்கல் 431 295 15
ஈரோடு 1656 812 11
கள்ளக்குறிச்சி 299 89 1
காஞ்சிபுரம் 1145 867 12
கன்னியாகுமரி 1251 295 16
கரூர் 344 306 8
கிருஷ்ணகிரி 739 297 3
மதுரை 1355 787 27
நாகப்பட்டினம் 585 377 16
நாமக்கல் 405 388 8
நீலகிரி 357 224 1
பெரம்பலூர் 202 83 1
புதுக்கோட்டை 423 111 1
ராமநாதபுரம் 367 325 2
ராணிப்பேட்டை 635 750 12
சேலம் 725 435 13
சிவகங்கை 224 184 1
தென்காசி 439 262 2
தஞ்சாவூர் 824 199 10
தேனி 723 628 6
திருப்பத்தூர் 630 491 6
திருவள்ளூர் 1667 1305 32
திருவண்ணாமலை 726 294 8
திருவாரூர் 731 325 1
தூத்துக்குடி 882 914 6
திருநெல்வேலி 678 588 4
திருப்பூர் 1796 704 10
திருச்சி 1331 933 15
வேலூர் 358 574 13
விழுப்புரம் 490 678 9
விருதுநகர் 850 255 13
பிறநோயாளிகள் 0 0 0
மொத்தம் 36184 24478 467