பொதுவாக இந்திய உணவுகளில் உருளைக்கிழங்கு இல்லாமல் இருக்காது.

உதாரணமாக, சாம்பார், கூட்டு, பொரியல், குழம்பு என எல்லாவற்றிலும் உருளைகிழங்கு சேர்ப்பார்கள்.

ஃப்ரிட்ஜில் பச்சைக் காய்கறிகள் இல்லாமல் கூட இருக்கலாம், ஆனால் உருளைகிழங்கு இல்லாமல் இருக்காது. 

மற்ற காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளை விட உருளைகிழங்கில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை உடலுக்கும் மூளைக்கும் நன்மையளிக்கிறது.

இந்த சமயத்தில் ஒன்றாக உருளைகிழங்கு வாங்கி வீடுகளில் வைத்திருக்கும் பொழுது, அதன் தோல்களில் சில முளைகள் தோன்றுவதை அவதானித்திருப்போம்.

தலைச்சுற்றல் பிரச்சினையுள்ளவர்கள் முளைவிட்ட உருளைக்கிழங்கை சாப்பிடலாமா? | What Happen If You Eat Sprouted Potatoஇதனை சிலர் தோலூடன் சேர்த்து அகற்ற முயற்சிப்பார்கள். ஆனாலும் முளைவிட்ட உருளைகிழங்கு சாப்பிடுவதால் பக்க விளைவுகள் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகின்றது.

அந்த வகையில் முளைவிட்ட உருளைகிழங்குகளை சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.    

உருளைக்கிழங்கு ஒளி, வெப்பம் மற்றும் ஈரப்பதனை வெளிபடுத்த பொழுது தான் முளைக்க ஆரம்பிக்கிறது. இந்த வளர்ச்சி இயற்கையானது என ஆய்வுகள் கூறுகின்றது.

சமையலறை, நேரடி வெளிச்சம் உள்ள இடங்களில் உருளைக்கிழங்கை வைக்கும் பொழுது தளிர்விட்டு முளைக்க ஆரம்பிக்கிறது. இதனால் உருளைகிழங்கில் இருக்கும் ஊட்டச்சத்தில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றது.

தலைச்சுற்றல் பிரச்சினையுள்ளவர்கள் முளைவிட்ட உருளைக்கிழங்கை சாப்பிடலாமா? | What Happen If You Eat Sprouted Potatoஅதாவது, வைட்டமின் சி மற்றும் கார்போஹைட்ரேட்டுகளில் சிறிதளவு குறையலாம். ஏனெனின் தளிர்விட்டு முளைக்க ஆரம்பிக்கும் பொழுது இப்படியான மாற்றங்கள் ஏற்படும்.

இருப்பினும் சில சமயங்களில் முளைப்பதால் உருளைகிழங்கில் நச்சு கலவை உருவாகலாம். இதனை நாம் சமைத்து சாப்பிடும் பொழுது வயிறு தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

முளைவிட்ட உருளைகிழங்கில் பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் சி, பி6 சத்துக்கள் இருக்கும். இருப்பினும் அதிக அளவு சோலனைன் (இயற்கை நச்சு) இருக்க வாய்ப்பு உள்ளது. அதிகளவு கிழங்கு உட்கொள்ளும் பொழுது வாந்தி, குமட்டல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.

மேலும், தலைவலி, தலைச்சுற்றல், குழப்பம் போன்ற அறிகுறிகளையும் காணக் கூடியதாக இருக்கும். முளைவிட்ட உருளைகிழங்கை தான் சமைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவர்கள் பச்சையாக இருக்கும் பாகத்தை வெட்டி அகற்றலாம்.

1. உருளைக்கிழங்கில் முளைகள் இருப்பது போன்று தெரிந்தால் அந்த பாகத்தை முழுமையாக வெட்டி அகற்ற வேண்டும்.

2. முளைவிட்ட உருளைகிழங்கை சமைக்க வேண்டிய கட்டாயம் இருந்தால் தோலை உரித்த பிறகு தான் பயன்படுத்த வேண்டும். இப்படி செய்வதால் தீங்கு விளைவிக்கும் கிளைகோல்கலாய்டுகளின் அளவு குறைகிறது.

தலைச்சுற்றல் பிரச்சினையுள்ளவர்கள் முளைவிட்ட உருளைக்கிழங்கை சாப்பிடலாமா? | What Happen If You Eat Sprouted Potato3. உருளைக்கிழங்கு மென்மையாகவும், துர்நாற்றம் வீசுவது போன்றும் இருந்தால் அதனை சாப்பிடாமல் இருப்பதே நல்லது. ஏனெனின் இது உங்கள் வயிற்றில் ஏகப்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

4. முடிந்தவரை உருளைகிழங்கை முழுமையாக சமைப்பதை குறைத்து கொள்ளவும். 

5. அதிக வெப்பநிலையில் உருளைக்கிழங்கை வேகவைப்பது, சுடுவது அல்லது வறுப்பது போன்ற செயன்முறையால் நச்சுக்களின் தாக்கம் அளவு குறைக்கப்படுகின்றது.