வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். சூரியன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும், தமிழ் மாதங்கள் பிறக்கின்றன

தற்போது சூரியன் துலாம் ராசியில் பயணித்து வருகிறார். பின்னர் நவம்பர் 16 ஆம் தேதி மதியம் 1:44 மணிக்கு சூரியன் விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியடைகிறார்.

இதனை தொடர்ந்து டிசம்பர் 16 ஆம் தேதி அதிகாலை 4:26 மணி வரை விருச்சிக ராசியில் சஞ்சரிப்பார். செவ்வாய் ஆட்சி செய்யும் விருச்சிக ராசிக்கு செல்லும் சூரியன் சில ராசிக்கு அனுகூலமான பலன்களை வழங்குவார்.

நவம்பர் 16 முதல் சூரிய பெயர்ச்சி: பணக்கட்டை அள்ளபோகும் ராசிகள் எவை? | November Month Rasipalan 2025 Sun Transits Scorpio

விருச்சிகம்

விருச்சிக ராசியில் சூரியனின் பெயர்ச்சி உங்களுக்கு நன்மையான ஆற்றலை கொடுக்கும். உங்களுடைய செல்வம், செல்வாக்கு, தொழில், நற்பெயர் மற்றும் பணிச்சூழலை போன்றவை வலுபெறும். உங்களுடைய பேச்சு மற்றும் திறமை என்பவற்றில் நீங்கள் மிகவும் திறமையாக செயற்படுவீர்கள். உங்களுடைய செயல்கள் மற்றவர்களால் மதிக்க கூடியதாக இருக்கும். 

சிம்மம் விருச்சிக ராசியில் சூரியனின் சஞ்சாரம் சுக ஸ்தானமான நான்காவது வீட்டில் நடக்கும். சொத்து, சௌகரியங்கள், வசதிகள், வீடு, வாகனம், உள்ளிட்ட அடிப்படை உங்களுக்கு வந்து சேரும். சொத்து வாங்கும் யோகம், வீடு கட்டும் அல்லது வீடு வாங்கும் அமைப்பு உண்டாகும். சொத்து தொடர்பான சிக்கல்கள் தீரும். குடும்பத்தில் ஒட்டுமொத்தமாக வசதிவாய்ப்புக்கள் எல்லாம் அதிகரிக்கும்.
கும்பம்

உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில், தொழில் ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிக்கிறார். உத்தியோகம் மற்றும் தொழிலில் நிலையாக இருப்பீர்கள். உங்களுடைய வளர்ச்சி ஏற்படும், நல்ல முன்னேற்றம் வாழ்க்கையில் நல்ல திருப்பங்களை கொண்டு வரும். வேலை மாற்றம், உயர் பதவிக்கான சூழல் நிலவும்.

மிதுனம் மிதுன ராசிக்கு உத்தியோக ரீதியாக சூரியனின் சஞ்சாரம் நல்ல மாற்றங்களை கொடுக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அரச பணி வேண்டும் என்பவர்கள் இந்த கால கட்டத்தில் முயற்ச்சிக்கலாம். வேலை ரீதியான மாற்றங்கள் விரைவில் வரும்.
கன்னி கன்னி ராசிக்கு முயற்சிகள் கைகூடும் மாதமாகும். குறிப்பாக, வெளிநாட்டு வேலை, வெளிநாட்டு ஒப்பந்தம் போன்ற விஷயங்கள், சாத்தியமாகும். உங்களுக்கு மூத்த உடன்பிறப்புகள் இருந்தால் அவர்களுடன் நல்ல உறவு மேம்படும்.