இன்றைய தலைமுறையினரை அதிகமாக தாக்கும் பிரச்சினை என்றால் அது முடி உதிர்வு தான். இந்த பிரச்சினை பல காரணங்களால் ஏற்படுகின்றது.

வானிலை மாற்றத்தினாலும், பரம்பரை முறையினாலும், ரசாயன அடிப்படையிலான சிகிச்சை, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் அடிப்படை உடல்நலப் பிரச்சினையினாலும் ஏற்படுகின்றது

இதற்காக பல மருத்துவமுறைகளை பின்பற்றினாலும், இயற்கை முறையில் முடி உதிர்வு பிரச்சினையை எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.

உங்களுக்கு முடி கொட்டுற பிரச்சனை அதிகமா இருக்கா? அருமையான டிப்ஸ் இதோ | 3 Ingredient Ayurvedic Remedy Hair Fallகறிவேப்பிலை, இஞ்சி மற்றும் நெல்லிக்காய் ஆகியவற்றின் நன்மையால் முடி உதிர்வை சரிசெய்வது மட்டுமல்லாமல், மயிர்க்கால்களை மீண்டும் செயல்படுத்தவும் மற்றும் முடி உதிர்தல் பிரச்சனையை உள்ளிருந்து சரிசெய்யவும் உதவுகிறது.

உங்களுக்கு முடி கொட்டுற பிரச்சனை அதிகமா இருக்கா? அருமையான டிப்ஸ் இதோ | 3 Ingredient Ayurvedic Remedy Hair Fall

ஒரு கைப்பிடி புதிய கறிவேப்பிலையை, ஒரு துண்டு இஞ்சி மற்றும் 2 புதிய நெல்லிக்காயை எடுத்து நன்கு கழுவி, நெல்லிக்காயின் விதையை எடுத்துவிட்டு, மிக்ஸியில் நன்கு அரைத்து ஜுஸ் ஆக்கி குடித்து வரவும்.

தேவைப்பட்டால் சிறிது மிளகு பொடியை சேர்த்துக் கொள்ளலாம். இந்த பானம் முடி மற்றும் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் சக்தி வாய்ந்தது.