சாஸ்திரத்தில் கூறப்பட்ட போது இந்துக்களின் நம்பிக்கையாக வாஸ்து பார்க்கப்படுகிறது.

நம்மை சுற்றியுள்ள ஆற்றல்களையும் பண வரவையும் அதிகப்படுத்தும் வழியாக இது பார்க்கப்படுகிறது.

நிதிப் பிரச்சனைகள் வராமல் இருப்பதற்காகவும், வீட்டில் நிம்மதியை கடைபிடிக்கவும் வாஸ்து குறிப்புக்கள் எழுதப்பட்டுள்ளது.

பணப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் சில விதிகளை பின்பற்றுவதால் பண பிரச்சினைகளை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

அந்த வகையில், வீட்டிலுள்ள பணப்பிரச்சினைகளை கட்டுப்பாட்டில் வைப்பதற்காக என்னென்ன விடயங்கள் அதிகமான கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பதிவில் பார்க்கலாம்.      

தீராத பணம் பிரச்சினையா? அப்போ இந்த விஷயங்களில் கவனம் தேவை | Vastu Tips For Financial Growth

பண கஷ்டத்தை நீக்கும் வாஸ்து குறிப்புக்கள்

1. பண கஷ்டம் அதிகமாக இருக்கும் வீடுகளில் நேர்மறையான ஆற்றல்களை அதிகரிக்க வேண்டும். அதற்கு நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற பொருட்களை வீட்டிலில் இருந்த அகற்ற வேண்டும். ஏனெனின் அசுத்தம் நிறைந்திருக்கும் பொழுது வீட்டில் நேர்மறையான ஆற்றல் இருக்காது.

2. வீட்டின் வடக்கு திசை குபேரனுக்கு உரியது என புராணக்கதைகள் கூறுகின்றன. ஆகையால் இந்த திசைக்கு பண வரவை அதிகப்படுத்தும் ஆற்றல் உள்ளன.

தீராத பணம் பிரச்சினையா? அப்போ இந்த விஷயங்களில் கவனம் தேவை | Vastu Tips For Financial Growth

3. குறிப்பாக உங்கள் வீட்டின் வடக்கு திசையில் சமையலறை வைப்பது தீங்கானது எனக் கூறப்படுகிறது. பண வாய்ப்பை அதிகப்படுத்தும் இடத்தில் அடுப்பை வைப்பது நல்லதல்ல.

4. பணம் வீட்டில் தங்குவதற்கு தென்மேற்கு திசை சிறந்த இடமாக பார்க்கப்படுகிறது. பணப்பெட்டியை இந்த திசையில் வைப்பது நல்லது. இந்த முயற்சி உங்களின் சேமிப்பை அதிகரித்து நிதி நிலைத்தன்மையை ஊக்கப்படுத்துகிறது.