வருகின்ற 21ஆம் தேதி முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை செவ்வாய் கிரகமானது கடக ராசியில் சஞ்சரிக்கிறது. இந்த காரணத்தினால் கடக ராசி பலவீனமடைகிறது.
செவ்வாய் கடகக ராசியில் பலவீனமடைந்தாலும் சில ராசிக்காரர்களுக்கு இது மிகவும் நன்மை கொடக்கும். அதிஷ்டத்தை பெறும் குறிப்பிட்ட இந்த ராசிகளின் தனிப்பட்ட, குடும்ப பிரச்சனைகள் தீரும்.
வருமானம் அதிகரிக்கும். நில ஆதாயம் ஏற்படும். சொத்து தகராறு, நீதிமன்ற வழக்குகள் தீரும். இதற்காக நீங்கள் சுப்ரமணியஷ்டகம் அல்லது அனுமன் சாலிசாவை பாராயணம் செய்வது நல்லது. இந்த செவ்வாய் பெயர்ச்சி எந்த ராசிகளுககு நன்மைகளை அள்ளிக்கொடுக்கப்போகின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
- உங்களுக்கு 3-ம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
- எதாவது பயணம் செய்தால் அதில் லாபம் கட்டாயமாக இருக்கும்.
- நீங்கள் இந்த நேரத்தில் எந்த முயற்ச்சியையும் மேற்கொண்டால் அது கண்டிப்பாக வெற்றியில் முடியும்.
- உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் மரியாதை அதிகரிக்கும்.
- சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனை குறைந்து வீட்டில் நிம்மதி மகிழ்ச்சி காணப்படும்.
கன்னி
- உங்கள் ராசியில் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு தன யோகம் கிடைக்கும்.
- இதனால் வருமானம் பல வழிகளில் பெருகி வீட்டில் சந்தோஷம் கிடைக்கும்.
- எல்லா வழிகளில் இருந்தும் லாபகரமான தொடர்புகள் ஏற்படும்.
- செய்யும் வேலையில் பதவி உயர்வுக்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.
- தொழில், வியாபாரம் நஷ்டத்தில் இருந்து மீண்டும் முன்னேற்றம் அடையும் வாய்ப்புள்ளது.
துலாம்
- துலாம் ராசிக்கு 10ம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கின்றது.
- செய்யும் தொழிலில் எதிர்பாராமல் முன்னேறுவீர்கள் பணம் கட்டு கட்டாக சம்பாதிப்பீர்கள்.
- உங்களுக்கு பிடித்த புதிய வேலைகள் உங்களுக்கு கிடைப்பதால் பணம் சம்பாதிப்பது அதிகரிக்கப்போகிறது.
- பணக்கார குடும்பத்துடன் திருமணம் நிச்சயமாகும். அனைத்து தரப்பிலும் வருமானம் அதிகரிக்கும்.
- வாழ்க்கையில் நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் நிறைவேறும்.
விருட்சிகம்
- விருச்சிக ராசிக்கு அதிஷ்ட ஸ்தானத்தில் அதிபதி செவ்வாய் சஞ்சரிப்பதால் வெளிநாட்டுப் பணத்தை அனுபவிக்கும் யோகம் கிடைக்கும்.
- இதனால் தொழில் மற்றும் வேலை காரணமாக வேறு நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புள்ளது.
- இருப்பிடத்தை விட்டு வளியிடத்தில் நல்ல சம்பளத்திற்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.
- தந்தை வழி சொத்து பிரச்சனை தீர்ந்து நீதிமன்ற வழக்குகள் சாதகமாக தீர்க்கப்பட்டு நில ஆதாயம் ஏற்படும்.
- சுற்றுலா, புனித யாத்திரைகள் செல்லும் வாய்ப்புள்ளது.
- இதுவரை உங்களுக்கு இருந்த தனிப்பட்ட பிரச்சனைகள் மெல்ல மெல்ல குறையும்.