எண் ஜோதிடத்தின்படி ஒவ்வொரு திகதியில் பிறந்தவரும் பணத்தை செல்வத்தை ஈர்க்க என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

எண்கணிதம் நாம் பிறந்த திகதியின் அடிப்படையில் நமக்கு இருக்கும் நல்லது கெட்டது என எல்லாவற்றையும் கூறும் ஒரு நம்பிக்கையாகும்.

 அந்த வகையில் எண் கணிதத்தின் படி, ஒருவர் பிறந்த தேதி அடிப்படையில் அவர் எந்த பரிகாரத்தை செய்தால்  வாழ்க்கையில் நிறை செல்வம் குவியும் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

நீங்கள் பிறந்த திகதிப்படி... பணக்காரராக என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? | According To Birthday Date Pariharam For Tamil

எண் 1

எண் 1 சூரிய பகவானுக்கு உரிய இலக்கமாகும். இந்த திகதியில் பிறந்தவர்கள் சூரியனால் ஆளப்படுவார்கள். 1, 10 19 மற்றும் 28 ஆகிய நான்கு தேதிகளில் பிறந்தவர்கள் மீது சூரிய பகவானின் அருள் இருக்கும்.

 

பரிகாரம் - ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் வெல்லம் மற்றும் கோதுமையில் செய்யப்பட்ட ரொட்டியை பசுக்களுக்கு உணவாக வழங்கினால் செல்வம் பெருகும்.  

எண் 2

எண் 2 சந்திரனுக்குரியது. எனவே 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் சந்திரனால் ஆளப்படுவார்கள்.

பரிகாரம் - இவர்கள் தங்களது தாயிடமிருந்து ஒரு வெள்ளி நாணயத்தை தூக்கி அதை தங்களுடன் எப்போதுமே வைத்திருக்க வேண்டும். இத தவிர வெள்ளி நகை அணியுங்கள், வெள்ளிக்கோப்பையில் தண்ணீர் குடியுங்கள்.  

எண் 3

குரு பகவானுக்குரியது. எனவே 3, 12, 21 மற்றும் 39 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் அருள் நிறைந்திருக்கும்.

பரிகாரம் - நீங்கள் பெற்றோரின் பாதங்களை தொட்டு தினமும் வணங்கி வந்தால், சிறப்பான பலன்கள் கிடைக்கும். அதனுடன் ஆலமரம் மற்றும் அரச மரத்திற்கு கீழ் இருக்கும் விநாயகருக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். 

எண் 4

எண் கணிதத்தின் படி, எண் 4 ராகுடன் தொடர்புடையது. எனவே 4, 13, 22 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ராகுவின் அருளுடன் இருப்பார்கள்.

பரிகாரம் - துர்கா தேவிக்கு வழிப்பாடு செய்யுங்கள். மேலும் துர்க்கையின் புகைப்படத்தை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். மாணவர்களாக இருந்தால் பென்சில் தானம் செய்தால் நன்மை.

எண் 5

எண் 6  புதன் பகவானுக்கு உரியது. 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு புதனின் அருள் இருக்கும்.

 

பரிகாரம் - இவர்கள் தங்களது தாய் அல்லது மனைவி மீது மிகுந்த அன்பு காட்ட வேண்டும். இது தவிர ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பசுக்களுக்கு பச்சை புல், பச்சை காய்கறிகள் வழங்க வேண்டும். புதன் கிழமை பச்சை நிற ஆடை அணிவது சிறந்தது.  

 எண் 6 

சுக்கிர பகவானுக்குரியது. 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு சுக்கிர பகவானின் அருள் நிறைந்திருக்கிறது.

பரிகாரம் - சுக்கிர பகவானின் அருளை முழுமையாக பெற தினமும் சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் கருப்பு பசுவிற்கு உணவளிக்க வேண்டும். ஏழைகளுக்கு உதவி அல்லது தானம் செய்யலாம். 

 எண் 7 

எண் 7 கேது பகவானுக்குரியது. எந்த மாதத்திலும் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மீது கேது பகவான் அருள் நிறைந்திருக்கும்.

பரிகாரம் - சிவபெருமானுக்கு புல் மற்றும் பூக்களை படைத்து வழிபட வேண்டும். மேலும் தங்க நிறத்தில் கடிகாரம் அணிந்தால் அதிர்ஷ்டம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை நிறம் உடைய நாய்களுக்கு உணவளிக்க வேண்டும். 

எண் 8

எண் 8 சனிபகவானுக்குரியது. 8,17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மீது சனி பகவான் அருள் எப்போதும் இருக்கும்.

பரிகாரம் - ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றி சனி பகவானை வழிபட வேண்டும். ஆலமரத்திற்கு அருகில் கருப்பு நிற கரும்புள்ளிக்கு இனிப்பு வைக்க ஈவேண்டும். 

எண் 9

எண் கணிதத்தின்படி 9 செவ்வாய் பகவானுக்குரியது. 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மீது செவ்வாய் பகவானின் அருள் நிறைந்திருக்கும்.

பரிகாரம் - வ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் வீட்டிற்கு அருகில் இருக்கும் முருகன் கோயிலுக்கு அல்லது அனுமன் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

கைகளில் எப்போதுமே சிவப்பு நிற கயிறை கட்ட வேண்டும். செவ்வாய்க்கிழமை தோறும் சிவப்பு நிற ஆடைகளை அணிவது அதிர்ஷ்டத்தை வழங்கும்.