உத்தரகாண்ட் மாநிலம் தேவால்தால் பகுதியில் உலா வரும் ஒரு சிறுத்தை அடுத்தடுத்து தாக்கியதில், 3 பெண்கள் இறந்தனர். இந்நிலையில், சிறுத்தை அப்பகுதியில் அடிக்கடி தென்படுவதால் கிராமவாசிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
சிறுத்தையை வேட்டையாடக கோரி அந்தப் பகுதியைச் சேர்ந்த ராம்கோட் கிராமத்தினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
அப்போது, கொலைகார சிறுத்தையை வேட்டையாட தற்போது வனத்துறை ஒரே ஒருவரை நியமித்துள்ளது போதாது. அதற்கு, திறமை வாய்ந்த ஒரு வேட்டையாளர் குழுவை நியமிக்க வேண்டும். சிறுத்தைக்குப் பலியான 3-வது பெண்ணின் 3 வாரிசுகளில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கிராமவாசிகள் வலியுறுத்தினர்.