ஆப்பிள் ஐபோன்களில் ஒரே நேரத்தில் பல கன்டக்குகளை நீக்குவது எப்படி என்ற விடயம் சிலருக்குத்தான் தெரியும். பல பேருக்கு இது குறித்து தெளிவான விளக்கம் இல்லை. அதன்படி ஐபோனில் ஒரே நேரத்தில் எப்படி பல கன்டக்குகளை அழிப்பது என்று பார்ப்போம்.

  • முதலில் ஐபோனில் கன்டக்ட் ஆப்ஐ திறக்க வேண்டும்.

  • அதில் ஒரு கன்டக்டை தெரிவு செய்து, விரல்களை மேல் அல்லது கீழ் நோக்கி நகர்த்துவதன் மூலம் மேலதிக கன்டக்குகளை தெரிவு செய்யலாம்.

  • அழிக்க வேண்டிய கன்டக்ட்களை தெரிந்தெடுத்த பின்னர் பயனர்கள் தங்கள் விரல்களை எடுத்துவிட வேண்டும்.

  • இப்போது தெரிவு செய்த கன்டக்குகளை ஒரு விரலால் அதிக நேரம் அழுத்த வேண்டும்.

  • Delete (x) contacts என்கின்ற ட்ரொப் டவுன் லிஸ்ட்டில் உங்கள் விருப்பதை தெரிவு செய்யவும்.

  • இதன் கடைசிப் பகுதியாக Delete Contacts என்பதை தெரிவு செய்ய வேண்டும்.