வித்தியாசமான கதைக்களங்களைத் தேடிப் பிடிக்கும் கிறிஸ்டோபர் நோலன் இந்த முறை கையில் எடுத்திருப்பது டைம் டிராவல். அவரின் ‘டெனட்’ படத்தின் டிரெய்லரில் ‘இது டைம் டிராவல் ரிவர்ஸல்’ என வரும் வசனம், விபத்து ஒன்றின் காட்சியமைப்பு, ஏற்கெனவே சுடப்பட்ட புல்லட்களைத் துப்பாக்கியால் திரும்ப கேட்ச் செய்வது எனப் பல மாயவித்தைகள் நிகழ்கின்றன. குறிப்பாக ரிவர்ஸில் ஓடும் டைமில் கதாநாயகர்கள் ஃபார்வேர்டாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இப்போதே யூடியூபர்களும் ‘சயின்ஸ்ல இது என்ன தியரி தெரியுமா?’ என பிசிக்ஸ் புக்கைப் புரட்ட ஆரம்பித்துவிட்டார்கள். படம் ஜூலை ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டாலும் கொரோனா விடுமா என்பதை டைம் டிராவல் செய்துதான் பார்க்கவேண்டும். வெயிட்டிங்!