விநாயகர் சதுர்த்தி இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், இதுகுறித்த சுவாரசிய தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்றைய தினத்தில் மண்ணில் விநாயகர் திருவுருவத்தை செய்து வழிபட்டால் மிகுந்த பலன்களை அடையலாம் என்பது ஐதீகம்.

விநாயகர் அவதரித்த நாளை விநாயகர் சதுர்த்தியாக நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், 51 வடிவ திருவுருவச் சிலைகளில் விநாயகரை வழிபடவும் செய்கின்றனர்.

விநாயகர் சதுர்த்தி பின்னணியில் இருக்கும் சம்பவம் தெரியுமா? சுவாரஸ்யமான தகவல்கள் | Vinayaka Chaturthi Interesting Fact About Vinayaga

ஒரு முறை பிரம்மா கொட்டாவி விடும்போது சிந்தூரனன் எனும் அரக்கன் தோன்றியுள்ளான். அவனுடைய தேகமானது அந்தி சாயும்போது சிவக்கும் பானத்தை போன்று இருந்துள்ளது.

இது பிரம்மாவை அச்சப்படுத்தியதால், சிந்தூரணன் கேட்பதற்கு முன்பாகவே அவனுக்கு வரங்களைக் கொடுத்துள்ளாராம். எந்தவொரு கஷ்டம் இல்லாமல் வரத்தினை பெற்றுக்கொண்ட கொண்டாட்டத்தில் இருந்த அரக்கன், ஆணவத்தில் மூவுலகையும் ஆட்டி படைத்துள்ளான்.

விநாயகர் சதுர்த்தி பின்னணியில் இருக்கும் சம்பவம் தெரியுமா? சுவாரஸ்யமான தகவல்கள் | Vinayaka Chaturthi Interesting Fact About Vinayaga

மும்மூர்த்திகள் என்ன செய்வதென தெரியாமல் திகைத்த நிலையில், விநாயகர் தோன்றி, படப்பட வேண்டாம். நானே உமா தேவியாரின் திருவயிற்றில் அவதரிப்பேன் என்று கூறிவிட்டு மறைந்துள்ளார்.

உமாதேவியும் கர்ப்பமான நிலையில், அரக்கன் சிந்தூரனன் காற்று போல உமாதேவியின் வயிற்றில் புகுந்து குழந்தையின் தலையை திருகி எடுத்து சென்றுவிட்ட நிலையில், குழந்தை தலை இல்லாமல் பிறந்தததைப் பார்த்து அனைவரும் பதறியுள்ளனர்.

ஆனால் சிவபெருமான் சாந்தமாக அமர்ந்து, கஜமுகாசுரன் தன்னிடம் கேட்டபடி அவனுடைய தலையைத் தனது குழந்தைக்கு பொருத்தியுள்ளார். 

இப்படியே கஜானனன் விநாயகப் பெருமானாக அவதாரம் எடுத்த நிலையில், அவரை உமாதேவி நல்லபடியாக வளர்த்து பின்பு, சிந்தூரனனை அழிக்க சென்று அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

அதாவது தன் துதிக்கையால் சிந்தூரனனை தூக்கி ரத்தம் வரும் அளவிற்கு அடித்து, அந்த ரத்தத்தினை தனது உடம்பில் பூசிக் கொண்டாராம். இதனால் தான் சிந்தூர விநாயகனர் என்று அவருக்கு பெயர் வந்ததாகவும், இதுவே பார்கவ புராணம் என்றும் கூறப்படுகின்றது.

இந்து புராணத்தின்படி, பார்வதி தேவி ஒருமுறை நீராட சென்ற போது உள்ளே யாரும் பிரவேசிக்கக்கூடாது என்று விநாயகரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

அப்பொழுது வெளியே சென்று திரும்பிய சிவபெருமான் உள்ளே செல்ல முயன்றுள்ளார். அப்பொழுது தாய் சொல்லை தட்டாத பிள்ளையாக இருந்த பிள்ளையார் சிவபெருமானை தடுத்ததால், உடனே கோபமாகிய சிவபெருமான் கோபத்தில் விநாயகரின் தலையை கொய்துவிட்டு போயுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி பின்னணியில் இருக்கும் சம்பவம் தெரியுமா? சுவாரஸ்யமான தகவல்கள் | Vinayaka Chaturthi Interesting Fact About Vinayaga

நீராடிவிட்டு வந்த பார்வதி தேவி தலை துண்டிக்கப்பட்டு கிடந்த மகனை பார்த்து உச்சக்கட்ட கோபத்தில் கதறியுள்ளார். உடனே அவரை சமாதானப்படுத்துவதற்கு சிவபெருமான் வடதிசையில் போய் கண்ணில் படும் முதல் உயிரினத்தின் தலையை கொண்டு வரக் கூறியுள்ளார்.

வட திசையில் முதலில் யானையினைக் கண்டதால் யானையின் தலையை வெட்டி கொண்டுவந்து சிவனிடம் கொடுத்துள்ளனர். பின்பு அதனை விநாயகரின் உடம்பில் வைத்து உயிர் கொடுத்துள்ளார்.

பின்பு மகன் உயிரோடு வந்ததைப் பார்த்து தேவையார் சாந்தமடைந்துள்ளார். அதிலிருந்தே கணேசன் என்று விநாயகருக்கு சிவபெருமான் நாமம் சூட்டியுள்ளார்.

தன்னுடைய கணங்களுக்கு தலைமையாகவும் விநாயகரை நியமனம் செய்தார் என ‘நாரதபுராணத்தில்’ சொல்லப்பட்டுள்ளது. இது தான் பிள்ளையார் அவதரித்த கதையாகும்.