பொதுவாகவே அசைவ பிரியர்களும் விரும்பி சாப்பிடும் ஒரு சில சைவ உணவுகளின் பட்டியலில் சேனைக்கிழங்கு முக்கிய இடம் பிடித்துவிடுகின்றது. 

குறிப்பாக சேனைக்கிழங்கு வறுவல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.

senaikilangu Varuval: கறிசுவையை மிஞ்சும் சேனைக்கிழங்கு வறுவல்... எப்படி செய்வது? | Senaikizhangu Varuval Recipe In Tamil

கல்யாண வீட்டு மையல் போன்று கறி சுவையை மிஞ்சும் சுவையில் சேனைக்கிழங்கு வறுவலை எளிமையாக எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

சேனைக்கிழங்கு - 1/4 கிலோ

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

எண்ணெய் - 4 தே.கரண்டி 

பட்டை - 2 துண்டு

 சோம்பு - 1/4 தே.கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து 

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 தே.கரண்டி

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி

மல்லித் தூள் - 1/4 தே.கரண்டி

உப்பு - தேவையான அளவு 

தண்ணீர் - சிறிதளவு

senaikilangu Varuval: கறிசுவையை மிஞ்சும் சேனைக்கிழங்கு வறுவல்... எப்படி செய்வது? | Senaikizhangu Varuval Recipe In Tamil

அரைப்பதற்கு தேவையானவை 

துருவிய தேங்காய் - 3 தே.கரண்டி

கசகசா - 1/2 தே.கரண்டி

சோம்பு - 1/2 தே.கரண்டி

மிளகு - 1/4 தே.கரண்டி

சீரகம் - 1/4 தே.கரண்டி

பட்டை - 1 துண்டு 

கிராம்பு - 3

செய்முறை

முதலில் சேனைக்கிழங்கை சுத்தம் செய்து  தோலை நீக்கிவிட்டு, சதுர அமைப்பில் துண்டுகளாக வெட்டி தனியாக எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.

senaikilangu Varuval: கறிசுவையை மிஞ்சும் சேனைக்கிழங்கு வறுவல்... எப்படி செய்வது? | Senaikizhangu Varuval Recipe In Tamil

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நீரை ஊற்றி, சிறிது கல் உப்பு போட்டு கொதிக்கவிட வேண்டும். நன்றாக கொதித்ததன் பின்னர் துண்டுகளாக்கப்பட்ட சேனைக்கிழங்கை அதில் போட்டு அரை அவியலில் இறக்கி நிரை வடித்து தனியாக எடுத்துக் வைத்துக்கொள்ள வேண்டும். 

அதனையத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து,  எண்ணெய் ஊற்றி சூடானதும், சேனைக்கிழங்கை போட்டு நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

senaikilangu Varuval: கறிசுவையை மிஞ்சும் சேனைக்கிழங்கு வறுவல்... எப்படி செய்வது? | Senaikizhangu Varuval Recipe In Tamil

பின்னர் துருவிய தேங்காய், கசகசா, சோம்பு, மிளகு, சீரகம், பட்டை மற்றும் கிராம்பு ஆகியவற்றை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு அதில் சிறிதளவு நீரை ஊற்றி நன்றாக பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து மற்றுமொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து , அதில் 4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்நிறமாகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும். அடுத்தாக  இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும். 

senaikilangu Varuval: கறிசுவையை மிஞ்சும் சேனைக்கிழங்கு வறுவல்... எப்படி செய்வது? | Senaikizhangu Varuval Recipe In Tamil

அவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி,  மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் ஆகியவற்றை  சேர்த்து 2 நிமிடங்கள் வரையில் நன்றாக வதக்க வேண்டும். 

பின்னர் பொரித்து வைத்துள்ள சேனைக்கிழங்கையும் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டு ,அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து கிளறி, சிறிது நீரை ஊற்றி பிரட்டி மூடி வைத்து, 5 நிமிடங்கள் வரையில்  நன்றாக வேகவிட வேண்டும். 

தண்ணீர் நன்றாக வற்றியதும், அடுப்பை உயர் தீயில் வைத்து, நிறம் மாறும் வரையில் நன்றாக கிளறி இறக்கினால், அட்டகாசமான  சுவையில் சேனைக்கிழங்கு வறுவல் தயார்.