ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகின்றது. அந்தவகையில் அழகு மற்றும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரன் மாதம் தோறும் தனது ராசியை மாற்றக்கூடியவர்.

ஒருவரின் ராசியில் சுக்கிரன் வலுவான இடத்தில் இருந்தால் செல்வ செழிப்புக்கு பஞ்சமே இருக்காது. தற்போது தனுசு ராசியில் பயணிக்கும் சுக்கிர பகவான் எதிர்வரும் 13 ஆம் திகதியில் மகர ராசிக்கு இடப்பெயர்வு அடையவுள்ளதுடன், ஜனவரி 15 ஆம் திகதி பொங்கல் திகத்தில்  யுரேனஸுடன் சேர்ந்து நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார்.

84 ஆண்டுகளின் பின் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்... ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்! | Navpanchami Rajyog These 3 Zodiacs Get Huge Luck

இந்த யோகத்தின் போது சுக்கிரனும் யுரேனஸும் ஒன்றுக்கொன்று 120 டிகிரியில் இருக்கும். இவ்வாறு உருவாகும் யோகத்தின் தாக்கமானது 12 ராசிகளிலும் பிரதிபலித்தாலும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பொருளாதார ரீதியில் அமோக பலன்களை கொடுக்கப்போகின்றது.

அந்தவகையில், நவபஞ்சம ராஜயோகத்தால், செல்வ செழிப்பான வாழ்க்கையை அனுபவிக்கப் போகும் மூன்று ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்

ரிஷபம்

84 ஆண்டுகளின் பின் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்... ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்! | Navpanchami Rajyog These 3 Zodiacs Get Huge Luck

பொங்கல் நாளில் உருவாகும் நவபஞ்சம ராஜயோகமானது சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறப்பெடுத்த ரிஷப ராசியினருக்கு பொருளாதார ரீதியில் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். 

நீண்ட நாள் உழைப்புக்காக பலனை இந்த ராஜயேகத்தின் மூலம் அனுபவிப்பார்கள். சிலருக்கு வெளிநாட்டில் சென்று வேலை பார்ப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

தொழில் ரீதியாக, நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு மனதுக்கு பிடித்த வேலை அமையும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பலவழிகளிலும் பணம் சம்பாதிப்பதற்காக வாய்ப்பு அமையும். 

காதல் வாழ்க்கையில் நீண்ட நாட்களாக இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகரம்

84 ஆண்டுகளின் பின் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்... ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்! | Navpanchami Rajyog These 3 Zodiacs Get Huge Luck

பொங்கல் தினத்தில் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் வேலை மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத அளவுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். குழந்தைகளால் நல்ல செய்திகள் வந்துசேரும். ஆன்மீக விடயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வணிகத்தில் ஈடுபடுவோருக்கு அதிக லாபம் ஈட்டும் காலகட்டமாக இது மாற்றமடையும். 

குடும்பத்துடன் அதிக மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிக்க கூடும். புதிய வியாபாரங்களை தொடங்குவதற்கு வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் பதிவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. 

மிதுனம்

84 ஆண்டுகளின் பின் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்... ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்! | Navpanchami Rajyog These 3 Zodiacs Get Huge Luck

 நவபஞ்சம ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் பல வழிகளிலும் சாதக பலன்களை அனுபவிப்பார்கள். 

வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை நிகழும். செல்வ செழிப்பு அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் பணம் வந்து சேரும். பரிசுகளால் மனமகிழ்ச்சி உண்டாகும்.

பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் உண்டாகும். திருமண வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கி கணவன் மனைவிக்கிடையில் காதல் அதிகரிக்கும்.