ஆட்டுப்பாலில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக கூறப்படுகின்றது.
ஆனால் அவை உடலுக்கு மட்டுமல்லாமல் சருமத்திற்கு ஏகப்பட்ட பலன்களை கொடுக்கிறது.
ஆட்டுப்பால் சருமத்தில் ஏற்படும் எண்ணெய் பசைக்கு இயற்கையான தடையாக அமைந்து சருமத்தை புது பொலிவுடன் வைத்து கொள்கிறது.
சருமத்தில் இருக்கும் தட்டுக்களும் பாதுகாப்பாக இருக்கும். ஆட்டுப்பாலில் ஒருவகையான இயற்கை கொழுப்புகள் உள்ளன.
இது தோலில் அதிக ஈரப்பதம் அல்லது எண்ணெய் பசை இல்லாமல் பாதுகாக்கிறது. வறண்ட சருமம் இருப்பவர்கள் இதனை செய்து பார்க்கலாம்.
அந்த வகையில் ஆட்டுப்பாலை எப்படி சரும பாதுகாப்பிற்கு பயன்படுத்தலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஆட்டுப்பால் - 2 ஸ்பூன்
- தேன் - 1 ஸ்பூன்
- தயிர் - 2 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
Face Mask தயாரிப்பு முறை
சரியான அளவு தயிரை எடுத்து கார்ட்டன் துணியால் நன்கு கட்டி தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி கொள்ளவும்.
அதனுடன், ஆட்டுப்பால், தேங்காய் எண்ணெய், மற்றும் தேன் ஆகிய மூன்றையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
கலந்து விட்டு அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
சரியாக 15-20 நிம்டங்களுக்கு பின்னர் தண்ணீரால் கழுவ வேண்டும்.
இப்படி அடிக்கடி செய்து வந்தால் சருமத்தின் நிறத்தில் மாற்றத்தை பார்க்கலாம். அத்துடன் நீரேற்றம் அதிகமாக இருக்கும்.