இந்த சமய சாஸ்திரங்களின் பிரகாரம் மூக்குத்தி என்பது சுமங்கலிப் பெண்களின் பதினாறு அலங்காரப்பொருட்களும் மிகுந்த முக்கியத்துவம் கொண்ட ஒரு அலங்காரப்பொருளாக பார்க்கப்படுகின்றது.

பொதுவாகவே நமது முன்னோர்கள் எதை செய்தாலும் அதற்கு பின்னால் நிச்சயம் துல்லியமான அறிவியல் காரணம் கட்டாயம் இருக்கும்.

பெண்கள் மூக்குத்தி ஏன் இடது பக்கத்தில் அணியணும்னு தெரியுமா? | What Are The Benefits Of A Left Nose Ring

அந்த வகையில் பெண்கள் மூக்குத்தி அணிவதன் பின்னால் உண்மையில் என்ன காரணம் இருக்கின்றது? ஏன் பெரும்பாலான பெண்கள் இடது பக்க மூக்குப்பகுதியில் மூக்குத்தி அணிகின்றார்கள் என்பது குறித்து விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.

பெண்கள் மூக்குத்தி ஏன் இடது பக்கத்தில் அணியணும்னு தெரியுமா? | What Are The Benefits Of A Left Nose Ring

மூக்கு குத்திக்கொள்வது அழகாக இருக்கிறது, ஆனால் அழகியலை விட உடல் மாற்றத்தின் நன்மைகள் அதிகம். நிச்சயமாக, நீங்கள் பலவிதமான உடலைத் துளைக்கும் நகைகளைத் தேர்வுசெய்து, உங்கள் தோற்றத்தை அழகாக்கிக்கொள்ளலாம்.

அறிவியலின் அடிப்படையில் மூக்கு குத்துவதானது  உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் துணைப்புரிகின்றது. குறிப்பாக உடலில் சில பகுதிகளில் துளையிடும் போது, ​​ஆற்றல் ஓட்டம் மேம்படுகிறது மற்றும் உடலில் உள்ள செயல்பாடுகள் மேலும் ஒழுங்குபடுத்தப்படும் என்று கருதப்படுகிறது.

பெண்கள் மூக்குத்தி ஏன் இடது பக்கத்தில் அணியணும்னு தெரியுமா? | What Are The Benefits Of A Left Nose Ring

மூக்கு குத்துதல் என்பது  ஒரு பொதுவான கலாச்சார நடைமுறையாகும், மேலும் ஆயுர்வேத நூல்கள் இடது மூக்கில் குத்துவது மாதவிடாய் செல்முறையை சீர் செய்வதாக குறிப்பிடப்படுகின்றது. மேலும் நோயெதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகின்றது.

பெண்களின் உடல் அமைப்பின் பிரகாரம் இடதுப்பக்க நாசிகயானது மாதவிடாய் சுழற்சியுடன் தொடர்புடையது. இடது பக்கம் மூக்குத்தி அணிவதால்  மாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கின்றது. மேலும் மாதவிடாயின் போது ஏற்படும் வலியையும் குறைக்கின்றது. 

பெண்கள் மூக்குத்தி ஏன் இடது பக்கத்தில் அணியணும்னு தெரியுமா? | What Are The Benefits Of A Left Nose Ring

தங்கம் மற்றும் வெள்ளியில் மூக்குத்தி அணிவதால் மிகுந்த ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.தங்கம் உடலுக்கு ஆற்றலை கொடுக்கும் அது போல் வெள்ளி உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கின்றது.