மழைக்காலத்தில் வரக்கூடிய காய்ச்சல் பரவி மக்களின் உயிர்களைக் காவு வாங்குவது என்றால் அது டெங்கு நோய் தான். இன்று வரை பலர் இந்த டெங்கு நோயால் பாதிக்கபபட்டு வருகின்றனர்.

இதற்கு நாம் வாழும் சுற்று சூழலை சுத்தமாக வைத்திருப்பது நல்லது. இந்த நோய் ஈடிஸ் எனும் நுளம்பினால் வருகின்றது.

இது பெரும்பாலும் மழைக்காலத்தில் தான் வருகின்றது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கின்றது. இந்த நோய் வந்தால் உடலில் என்னென் அறிகுறிகள் காட்டும் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகள் உடல் சோர்வு அதிகமாக காணப்படும். படுக்கையை விட்டு எழ முடியாத அளவுக்கு உடல் வலி வாட்டி எடுக்கும். வலியால் தூக்கமும் வராது. 104 டிகிரி பாரன்ஹீட் வரை காய்ச்சல் இருக்கும்.

உயிரை காவு வாங்கும் டெங்கு நேயின் அறிகுறிகள் என்னணு தெரியுமா? | Dengue Symptoms In Tamil

தலைவலி அதிகமாக இருக்கும். கண்களில் அதிக வலி இருக்கும். அத்துடன் கால்கள், அதனுடன் மூட்டுகளில் வலி இருக்கும். இவற்றை தவிர உடலில் வலி அதிகமாக இருக்கும். முகம் வீங்கி போகும்.

கண்களும் வீங்கியிருக்கும். உடலில் ஆங்காங்கே தடிதடியாக படைகள் இருக்கும். அவை சிவப்பாக இருக்கும். அந்த படை இருக்கும் இடங்களில் அரிப்பை கொடுக்கும். அவ்வாறு சொரிய சொரிய தடிதடியாக வீங்கும்.

இவையெல்லாம் ஆரம்ப அறிகுறிகளாக கூறப்படுகின்றது. உடலில் பிளேட் லெட் பொதுவாக 4.50 லட்சம் வரை இருக்கும். இந்த எண்ணிக்கை டெங்கு வந்த ஓரிரு நாளில் படிப்படியாக குறையும்.

உயிரை காவு வாங்கும் டெங்கு நேயின் அறிகுறிகள் என்னணு தெரியுமா? | Dengue Symptoms In Tamil

இதை சரி செய்ய சிகிச்சை பெற வேண்டும்.இது 1 லட்சத்திற்கு கீழ் குறைந்தால் உயிருக்கு ஆபத்தாகிவிடும். இந்த நோய் தீவிரமானால் ஈறுகளில் ரத்தப்போக்கு ஏற்படும். அதிக அளவுக்கு உடல் அசதி, மாதவிடாய் காலமாக இருந்தால் உதிரப்போக்கு அதிகரிக்கும்.

மலம், சிறுநீரில் ரத்தம் வெளியேறும். தொடர்ந்து வாந்தி வரும், அந்த வாந்தியில் ரத்தமும் உண்டாக்கும்.இந்த அறிகுறிகள் உங்கள் உடலில் தெரிந்தால் கட்டாயமாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.