பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் அம்மா பிள்ளைகளாக இருக்கும் கணவர்கள் மற்றும் அவரது மனைவிகள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதோ போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை அறிவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
தற்போது அம்மா பிள்ளைகளாக இருக்கும் கணவர்கள் மற்றும் அவரது மனைவிகள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது. இதில் கணவர் வாங்கும் சம்பளத்தை அவரது அம்மாவிடம் கொடுத்துவிடுகின்றார் என்று மனைவி வைத்த குற்றச்சாட்டுக்கு, கணவர் அதிரடியாக பதில் அளித்துள்ளார்.
இறுதியில் மனைவி கணவரை எச்சரிக்கும் நிலையில் இரவில் அவரது மீசையை எடுத்துவிடுவதாக கூறி எச்சரித்துள்ளார்.