இயற்கை கொடுத்த சக்தி வாய்ந்த அற்புத மூலிகை என்றால் அது கற்றாழை மட்டுமே.

இதனை ஏழு முறை கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும் என பலரும் கூறி கேள்விப்பட்டிருப்போம்.

கோடிக்கணக்கில் செலவு செய்து பல மருத்துவ பொருட்களை பயன்படுத்துவதை விடவும் ஒரு சிறிய துண்டு கற்றாழையினால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.

கற்றாழையில் பல வகை உண்டு. எனினும் இவற்றில் சோற்றுக்கற்றாழை மட்டுமே மருத்துவப் பயன்பாட்டில் உள்ளது.

வளர்ந்த கற்றாழைச் செடிகளின் இலைகள் முற்றியதாக இருக்கும். அந்த இலைகளை மட்டுமே மருத்துவ தேவைகளுக்காக பயன்படுத்துவார்கள்.

அந்த வகையில் இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட கற்றாழையை சிலர் மறந்தும் கையில் எடுக்கக் கூடாது. அப்படியானவர்கள் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

1. கற்றாழை ஜெல்லினால் சிலருக்கு ஒவ்வாமை இருக்கலாம். இதனால் அலர்ஜி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் கற்றாழை- யாரெல்லாம் தொடக் கூடாது தெரியுமா? | Dangers Of Using Aloe Vera In Tamil2. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை நோய்க்கான மருந்து எடுத்து கொள்ளும் போது கற்றாழை ஜூஸ் அருந்தக் கூடாது.

3. ரத்த அழுத்தம், ரத்தம் உறைதல் போன்றவற்றுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் கற்றாழை ஜூஸ் குடிக்க வேண்டாம்.

உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் கற்றாழை- யாரெல்லாம் தொடக் கூடாது தெரியுமா? | Dangers Of Using Aloe Vera In Tamil4. கற்றாழையும் ரத்தம் உறைதலைத் தடுக்கும் தன்மை கொண்டது என்பதால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிக ரத்தப்போக்கு உண்டாக வாய்ப்புள்ளது.

5. வேறு ஏதாவது நோய்களுக்கு ஆங்கில மருந்து எடுத்துக்கொள்பவர்களாக இருந்தால் அவர்கள் கற்றாழை சம்பந்தப்பட்டவைகளை தொடக் கூடாது. உதாரணமாக கர்ப்பிணிகள், பிரசவித்த பெண்கள், ஒவ்வாமை பிரச்சினை உடையவர்களை கூறலாம்.