தமிழகத்தில் புதிதாக 5,684 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது ) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 74 ஆயிரத்து 940 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் புதிதாக 988 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய அறிவிப்பில் மேலும் 87 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 12 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ஒரேநாளில் 6,599 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை மொத்தம் 4 இலட்சத்து 16 ஆயிரத்து 715 பேர் குணமடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கொரோனா தொற்று உறுதியானவர்களில் 50 ஆயிரத்து 213 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.