ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இதனை தொடர்ந்து, அவர் கொள்ளுப்பிட்டி வாலுகாராமவில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

கடந்த 9ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அசாதார சூழ்நிலையையடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியிருந்தார். இதனையடுத்து, அமைச்சரவையும் கலைக்கப்பட்டது.

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேற்று (11) மாலை சந்தித்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடிகள் குறித்தும் நீண்ட நேரம் ஆழமாக கலந்துரையாடியுள்ளார்.

இதனையடுத்து, ஜனாதிபதி நேற்றிரவு நாட்டுமக்களுக்கு ஆற்றிய விசேட உரையில், மக்கள் நம்பிக்கைக்குரிய, பெரும்பான்மையை கொண்ட ஒருவரை பிரதமராகவும், புதிய அமைச்சரவையையும் ஒரு வாரத்திற்குள் நியமிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க புதிய அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் பெற்றுள்ளதாக இன்று அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.