நம் உடல் ஆரோக்கியமாக இருப்பந்தால் தான்  சிறப்பாக செயற்படுட முடியும். அதனாலேயே நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என முன்னோர்கள் சொல்லிவைத்திருக்கின்றார்கள். 

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியமாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் தான் தங்கியிருக்கின்றது.

அந்தவகையில் உடலுக்கு தேவையான மிக முக்கியமான எட்டு ஊட்டச்சத்துக்களில் வைட்டமின் பி வகைகளில் வைட்டமின் B6 ஒன்றாகும்.

இந்த வைட்டமின் B6, பைரிடாக்சின் என்றும் அழைக்கப்படுகிறது, இது நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும், இது உடலுக்கு பல செயல்பாடுகளுக்குத் தேவைப்படுகிறது.  

மூளை வளர்ச்சி முதல் தோல் பிரச்சனை வரை தீர்வு கொடுக்கும் வைட்டமின் பி6: எந்த பழங்களில் அதிகம்னு தெரியுமா? | What Fruit Is Rich In Vitamin B6மூளை வளர்ச்சி, நோயெதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு  பெரிதும் துணைப்புரிகின்றது. இந்த வைட்டமின் குறைபாடு காரணமாக  ரத்த சோகை, தோல் பிரச்சனை, மனச்சோர்வு மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் போன்ற பல்வேறு பிரச்சினை ஏற்படகூடும். 

அதனை தடுக்க பழங்கள் அதிகளவில் சாப்பிட வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் எந்த பழங்களில் வைட்டமின் B6 அதிகளவில் காணப்படுகின்றது என பலருக்கும் தெரிந்திருப்பது கிடையாது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

வாழைப்பழங்கள் 

மூளை வளர்ச்சி முதல் தோல் பிரச்சனை வரை தீர்வு கொடுக்கும் வைட்டமின் பி6: எந்த பழங்களில் அதிகம்னு தெரியுமா? | What Fruit Is Rich In Vitamin B6மலிவான விலையில் எல்லா காலங்களிலும் கிடைக்ககூடிய ஒரு பழம் தான் வாழைப்பழம். இதில் வைட்டமின் பி6 அதிகளவில் காணப்படுகின்றது. ஒரு நடுத்தர அளவிலான வாழைப்ழம் ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் பி6 ஊட்ச்சத்தின் 20% பூர்த்திசெய்கின்றது. 

அவகோடா

மூளை வளர்ச்சி முதல் தோல் பிரச்சனை வரை தீர்வு கொடுக்கும் வைட்டமின் பி6: எந்த பழங்களில் அதிகம்னு தெரியுமா? | What Fruit Is Rich In Vitamin B6அவகோடா பழத்தில், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் C, K1, B6, கார்போஹைட்ரேட்டுகள், புரதம், தாது உப்புக்கள், நல்ல கொழுப்புக்கள், என பல சத்துக்கள் அடங்கியுள்ளன. வைட்டமின் பி6 குறைப்பாடு உள்ளவர்கள் இதை சாதாரணமாகவோ, அல்லது ஸ்மூத்தியில் போன்று செய்தோ தினசரி சாப்பிடலாம். 

மாம்பழங்கள் 

மூளை வளர்ச்சி முதல் தோல் பிரச்சனை வரை தீர்வு கொடுக்கும் வைட்டமின் பி6: எந்த பழங்களில் அதிகம்னு தெரியுமா? | What Fruit Is Rich In Vitamin B6முக்கனிகளின் முதன்மையானது மாம்பழம். சுவையில் மட்டுமல்லாமல் ஊட்சத்துகளிலும் இது முதன்மை வகிக்கின்றது. இதில் வைட்டமின் பி6 உள்ளிட்ட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் செறிந்து காணப்படுகின்றது. குறிப்பாக, உடலிலுள்ள கெட்ட கொலஸ்ட்ரால்களை குறைக்கும் சக்தி இந்த மாம்பழங்களுக்கு உள்ளது. 

தர்பூசணி

மூளை வளர்ச்சி முதல் தோல் பிரச்சனை வரை தீர்வு கொடுக்கும் வைட்டமின் பி6: எந்த பழங்களில் அதிகம்னு தெரியுமா? | What Fruit Is Rich In Vitamin B6வெயில் காலத்தில் மட்டுமே கிடைக்கும் தர்பூசணி பழத்தை பற்றி நாம் இப்பொழுது பார்க்கப் போகின்றோம். அதிக அளவு நீர்ச்சத்துடனும், மிகுந்த சுவையுடனும் இருக்கும் தர்பூசணி நம் உடலை போதுமான அளவு நீர் சத்துடன் வைத்திருக்க உதவுகிறது. அத்துடன் வைட்டமின் பி6 அதிகளவில் இருபதால், ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணைப்புரிகின்றது. 

அன்னாசிப்பழம்

மூளை வளர்ச்சி முதல் தோல் பிரச்சனை வரை தீர்வு கொடுக்கும் வைட்டமின் பி6: எந்த பழங்களில் அதிகம்னு தெரியுமா? | What Fruit Is Rich In Vitamin B6அன்னாசி பழம் சாப்பிடுவதால்  சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும்.இந்த பழத்தில் வைட்டமின் பி6 சத்துடன் ப்ரோமெலைன் என்ற வேதிப்பொருளும் அதிகளவில் இருக்கிறது. இது செரிமானத்திற்கு உதவுவதோடு, உடல் வீக்கத்தையும் குறைப்பதிலும் பெரும் பங்காற்றுகின்றது.