நிவர் புயல் 16 கி.மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், புதுச்சேரியில் இரந்து 55 கி.மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.

 

அதிதீவிர புயலாக கரையை கடக்க இருக்கும் நிவர் புயல் 16 கி.மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வந்தது. அதன்பின் வேகம் 13 கி.மீட்டராக குறைந்தது. இரவு 8.30 நிலவரப்படி புயல் நகர்ந்து வரும் வேகம் 14 கி.மீட்டராக அதிகரித்தது.

 

தற்போது 9.30 மணி நிலவரப்படி நிவர் புயலின் நகரும் வேகம் 16 கி.மீட்டராக அதிகரித்துள்ளது. கடலூரில் இருந்து 60 கி.மீட்டர் தொலைவிலும், புதுவையில் இருந்து 55 கி.மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 160 கி.மீட்டர் தெலைவிலும் நிவர் புயல் நிலைகொண்டுள்ளது.

 

இன்னும் ஒரு மணி நேரத்தில் புதுச்சேரியை நிவர் புயல் தாக்குவது ஆரம்பமாகும்  என மத்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.