கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளதுடன், அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 604 ஆக அதிகரித்துள்ளது. 

இவ்வாறு உயிரிழந்த 2 பேரின் விபரங்கள் பின்வருமாறு, 

01. ஹிரிவடுன்ன பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 63 வயதுடைய ஆண் ஒருவர், 2021 ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். 

இவர் கொவிட் நியூமோனியா மற்றும் தீவிர சிறுநீரக நோய் நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

02. கரவெட்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 83 வயதுடைய ஆண் ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து கொவிட் 19 தொற்று கண்டறியப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். 

கொவிட் நியூமோனியா தொற்றுடன் மோசமான குருதி நஞ்சான நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.